ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம்பெயரும். அந்த வகையில், வியாழன் ஏப்ரல் 22 ஆம் தேதி மீனத்தில் மீனத்திற்கு சஞ்சாரம் செய்கிறார். அதே நேரத்தில் சந்திரன் மேஷ ராசியில் நுழைகிறார். வியாழனும் சந்திரனும் ஒன்று சேரும்போது கஜலட்சுமி யோகமும் உண்டாகும். இதனால் பல சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன.
கஜலக்ஷ்மி யோகம் சில ராசியினருக்கு மிகவும் நல்ல யோகத்தை கொடுக்கும். உங்களுக்கு அபரிமிதமான செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை பெறுவார்கள். கஜலட்சுமி யோகத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் பற்றி பார்க்கலாம்.
மேஷம் :
சந்திரன் மற்றும் வியாழன் இணைவதால் உண்டாகும் கஜலக்ஷ்மி யோகம் மேஷ பலன்களை கொடுக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அது மட்டும் அல்ல, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
இந்த காலத்தில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் நீங்கள் செய்யும் எல்லா வேளையிலும் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். இதனால், உங்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வுடன் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சமூகத்தில் மரியாதை கூடும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
Also Read | மிதுனத்தில் செவ்வாய்: அடுத்த 69 நாட்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!
தனுசு :
தனுசு ராசியினருக்கு கஜலக்ஷ்மி யோகம் செல்வத்தை அள்ளித்தரும். புதிய வருமான ஆதாயங்கள் உருவாகும். நீங்கள் இதில் முதலீடு செய்தாலும், அது லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காதல் உறவுகளில் இனிமையான தருணம் நிறைந்திருக்கும். வெளிநாட்டில் படிக்கும் ஆசை நிறைவேறும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Gurupeyarchi, Yoga, Zodiac signs