ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

சபரிமலையில் இன்று முதல் மகரவிளக்கு மஹோர்த்ஸவ காலம்... முழு விவரம் இதோ...  

சபரிமலையில் இன்று முதல் மகரவிளக்கு மஹோர்த்ஸவ காலம்... முழு விவரம் இதோ...  

சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில்

sabarimalai | சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று ( 30-12-2022 ) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது |

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று ( 30-12-2022 ) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 19 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யலாம் எனவும் வரும் 20 ஆம் தேதி காலையில் நடை சாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பனை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் கருப்பு உடை அணிந்து இன்று முதல் சன்னிதானம் நோக்கி வருகை தருகிறார்கள். மண்டல காலத்திற்குப் பிறகு மூடப்பட்ட ஐயப்பன் கோயில்  நடை மகரவிளக்கு பூஜைக்காக  இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில்  திறக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து  மேல்சாந்தி மாளிகைப்புறம் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரியிடம் , மாளிகைப்புறம் கோவிலை திறப்பதற்கான சாவியையும் பஸ்மவும் தந்திரி  வழங்குவார். தற்போது சபரிமலை மேல்சாந்தி பொறுப்பில் உள்ள திருவல்லா கவும்பாகம்  நாராயணன் நம்பூதிரி 18வது படி இறங்கி அங்கு அமைந்துள்ள ஆழிக்கு தீ மூட்டி ஆழியை பற்றவைக்கும் பூஜையை செய்வார்.

அதன் பிறகு இன்று முதல்  பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறலாம். ஆனால் இன்று (டிசம்பர் 30) ​​சிறப்பு பூஜைகள் இல்லை. மகரவிளக்கு  கால பூஜைகள் நாளை  31ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நிர்மால்யம் முடிந்த பிறகுதான் துவங்குகிறது. மேலும் பக்தர்கள் ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜைகள் மற்றும் மகர ஜோதி தரிசனம் செய்யலாம்.

இந்த ஆண்டுக்கான எருமேலி பேட்டை துள்ளல் ஜனவரி 11ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி பந்தளத்தில் இருந்து திருவாபரண ஊர்வலம் புறப்படுகிறது. 13ம் தேதி பம்பை தீபம் மற்றும் பம்பா சத்யா  நடைபெறும். மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் வரும் 18ம் தேதி நிறைவடைகிறது. மேலும் 19ம் தேதி இவ்வாண்டு மகரவிளக்கு புனித யாத்திரை நிறைவடைந்து மாளிகைப் புறத்தில் இறுதி நிகழ்வாக குருதி பூஜை நடைபெறும். அதன் பிறகு 20ம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

மகரவிளக்கு மஹோத்ஸவத்துக்கான ஏற்பாடுகள் பல்வேறு துறைகள் தலைமையில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Magaravilakku, Sabarimalai, Sabarimalai Ayyappan temple