Home /News /spiritual /

வெள்ளிக்கிழமையில் பெண்கள் செய்யக் கூடாதவைகள்..

வெள்ளிக்கிழமையில் பெண்கள் செய்யக் கூடாதவைகள்..

பெண்கள்

பெண்கள்

வெள்ளிக் கிழமை இவ்வளவு சிறப்புடையது தெரியுமா? அதனால் அன்று இதையேல்லாம் பெண்கள் வீட்டில் செய்யாதீர்கள்...

    பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். ஆனால் சில காரியங்களை கண்டிப்பாக பெண்கள் செய்யக்கூடாது.அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    1. குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

    2. இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.

    3. ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

    4. வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.

    5. விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

    Also see... செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

    6. நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.

    7.செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்யவோ கூடாது. அதுபோலவே வெள்ளிக்கிழமையும் செய்யக்கூடாது...

    8. இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

    9. வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

    10. வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். இதனால் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை அணிவதும், குபேர குங்குமத்தை அணிவதும் நல்ல பலனைத் தரும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி