ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ராகு கேது ஜாதக பிரச்னைக்கு தீர்வு.. வெள்ளிக்கிழமை அம்மன் தரிசனம்.. வழிபடும் முறைகள்!

ராகு கேது ஜாதக பிரச்னைக்கு தீர்வு.. வெள்ளிக்கிழமை அம்மன் தரிசனம்.. வழிபடும் முறைகள்!

அம்மன்

அம்மன்

Durgai Amman worship | வெள்ளிக்கிழமை தினத்தில் மட்டுமாவது காலை, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் பூஜை செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீர்க்க முடியாத துன்பங்கள் கூட வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனை வழிபட்டால் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். மற்ற நாட்களைவிட துர்க்கை அம்மன் வழிபாடு வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பானது என்கிறது சாஸ்திரம். துர்க்கையம்மன் வழிபாடு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும் ராகுகால நேரத்தில் மட்டும்தான் துர்க்கை அம்மன் வழிபாட்டினை முறைப்படி செய்து வருகின்றோம். ஆனால் வாரத்தில் இருக்கும் 7 நாட்களும் துர்க்கை அம்மனை  வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற முடியும்.

கிரகங்களில் ராகு கேதுவினால் ஜாதக ரீதியாக பிரச்சனை இருக்குமேயானால் துர்க்கை அம்மன் வழிபாடு மிகச் சிறப்பான பலனை தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தோஷங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் துர்க்கையம்மனை முறையாக வெள்ளி கிழமைகளிலும் வழிபடுதல் சிறப்பு... வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரம் ஆன 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். நெய் தீபமும் ஏற்றலாம். பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தேங்காய் சாதம் அல்லது பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யமாக படைத்து வழிபடுவது சிறப்பான ஒன்று.

' isDesktop="true" id="868008" youtubeid="a4tv9_PTy48" category="spiritual">

மேலும் இப்படி ஒருவர் தொடர்ந்து 3 வாரம் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

First published:

Tags: Amman Thayee