தினமும் அம்பாளை வணங்கி முக்தியைப் பெற அம்மன் கவச பாடல்களை கேளுங்கள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கும். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் சரி, ஒவ்வொரு வெள்ளியுமே அம்மன் வழிபாடுக்கு சிறந்தது. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் வாரக்கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் பவனி வரும் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதும் நம்பிக்கை.
மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். மேலும் இந்த ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
மேலும் படிக்க... தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய வழிகள்...
மேலும் படிக்க... செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amman Thayee, Hindu Temple