Home /News /spiritual /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (8 ஜூன் 2022) பண லாபம் அதிகமாக இருக்கும்..!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இன்று (8 ஜூன் 2022) பண லாபம் அதிகமாக இருக்கும்..!

எண்கணித ஜோதிடம்

எண்கணித ஜோதிடம்

Numerology | ஜூன் 8 ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)

சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் செயல்பட வேண்டியிருப்பதால், இன்று உங்களின் வேலை செய்யும் பாணியை மாற்ற வேண்டும். அரசியல், விளையாட்டுத் தலைவர்கள், கல்வியாளர்கள், நகைக்கடைக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் டீம் தலைவர்களுக்கு சில வாய்ப்புகள் தேடி வரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் தாமதம் ஏற்படும். பணப் பலன்கள் மிதமாக இருக்கும். ஆனால் சர்ச்சைகள் இல்லாமல் இருக்கும். மன நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க இன்று பொறுமையாக வேலை செய்ய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவர்கள், விளையாட்டுத் தலைவர்கள், பொறியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். விவசாயம் மற்றும் கல்வித் தொழில் லாபத்தில் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம் மற்றும் மஞ்சள்
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: ஆசிரமத்தில் கோதுமையை தானமாக வழங்குங்கள்

#எண் 2 ( 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்கள் விசுவாசமும் நேர்மையும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். இது உங்களைத் தலைவர்களாகவும் மற்றவர்களை உங்களைப் பின்பற்றுபவர்களாகவும் மாற்றும். உங்கள் அப்பாவித்தனத்தை மக்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பதால், அறிவை பயன்படுத்துங்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தரகர்கள், பயண முகமைகள், பங்குச் சந்தை ஆகியோர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: கால்நடைகளுக்கு தண்ணீரை தானம் செய்யுங்கள்

#எண் 3:(3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்கள் எல்லையற்ற ஆற்றல் மற்றும் நெகிழ்வுத்தன்மை வாழ்க்கைத் தொழிலில் புதிய வாய்ப்பை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் மாயாஜால பேச்சு உங்கள் முதலாளியையும் வீட்டில் உள்ளவர்களையும் ஈர்க்கும். எல்லா சூழ்நிலைகளிலும் வேலை செய்யும் அளவுக்கு நீங்கள் நெகிழ்வாக இருப்பீர்கள், அதனால் வெற்றி வெகு தொலைவில் இல்லை. இன்று பணம் மற்றும் பொருட்களை கையாளுவதில் கவனமாக இருக்க வேண்டும். படைப்பாற்றல் மிக்கவர்களும், பொது நபர்களும் புகழைப் பெறுவார்கள். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் வெற்றியையும், பண வெகுமதியையும் பெறுவார்கள். கட்டுமானம் மற்றும் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் இது. காலையில் சந்தனத்தை நெற்றியில் வைத்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
தானம்: சூரியகாந்தி எண்ணெயை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்

#எண் 4:( 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

உயர் பதவியில் இருப்பவர்கள் மேலும் மேலும் உயர இன்று வாய்ப்புள்ளது. உங்கள் பண விஷயங்களில் யாருடனும் திட்டங்களைப் பகிர வேண்டாம். மாணவர்கள் அரசு வேலைக்குச் சாதகமாக இருந்தால் விண்ணப்பிக்க வேண்டும். பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்வது இன்று அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உதவும். விளையாட்டு வீரர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நிதி ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். மேலும் செயல் திறனுக்காகவும் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட முடியாத அளவுக்கு நீங்கள் பரபரப்பாக இருப்பீர்கள், எனவே அவர்களின் குறைகளை அமைதியாகக் கேளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: பிச்சைக்காரர்களுக்கு பாதணிகளை தானம் செய்யுங்கள்

#எண் 5: ( 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

காதலில் இருப்பவர்களுக்கு இன்று கடினமான நாள். ஆனால் தொழில் விஷயத்தில் இன்று வெற்றி நிச்சயம். உங்கள் உணர்வுகளை நண்பர்களிடம் பகிர இன்று சிறந்த நாள். இயந்திரங்கள் வாங்க, சொத்துக்களை விற்க, உத்தியோக பூர்வ ஆவணங்களில் கையொப்பமிட இன்று ஏற்ற நாள். செய்தி தொகுப்பாளர்கள், நடிகர்கள், கைவினை கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு இன்று பல நன்மைகள் கிடைக்கும். எப்போதும் தந்திரத்துடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
தானம்: அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 6: (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கும், வேடிக்கையாகப் பயணம் செய்வதற்கும் இன்று ஒரு சிறந்த நாள். இலக்கை நோக்கி நீங்கள் கடினமாக உழைத்தால் இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் செயலுக்கு காலம் துணையாக இருப்பதால், இன்று உங்கள் கனவுகளை நிறைவேற்ற தயாராக இருங்கள். குடும்ப பாசமும் ஆதரவும் செழிப்பை தரும். பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் தேவை. சில்லறை விற்பனையாளர்கள், ஆசிரியர்கள், நகைக்கடைக்காரர்கள், அழகுசாதன வணிகர்கள், வடிவமைப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் ஆகியோர்களுக்கு இன்று பல நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்கள்: 6 மற்றும் 9
தானம்: வெள்ளை அரிசியை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்

#எண் 7: ( 7, 16 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

உங்களுக்கு நெருக்கமானவர்களைக் குறை கூறுவதைத் தவிர்க்கவும். நீங்கள் பண வளர்ச்சியை அனுபவிக்க கூடிய நேரம் விரைவில் வரும். இன்று வியாபாரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள், மேலும் சச்சரவுகளைத் தவிர்க்க போட்டியாளர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள் மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 3
தானம்: மஞ்சள் பருப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 8: ( 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

இன்று உங்களுக்கு பல விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கலாம். பண லாபம் இன்று அதிகம் இருக்கும். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உங்களை விசுவாசமாக பின்பற்றுபவர்கள் என்பதால் தலைமைத்துவத்தை அனுபவிக்கும் நேரம் இது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும். பசுமை தோட்டம் மற்றும் நீர் செடிகளை சுற்றி சிறிது நேரம் செலவிடுங்கள். இது மன நிம்மதியை தரும். தொழில் தொடர்பான முடிவுகள் எதிர்காலத்திற்கு சரியானதாக இருக்கும், உங்கள் வழிகாட்டியின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: ஏழைகளுக்கு குடையை தானம் செய்யுங்கள்

#எண் 9:( 9, 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

தொழில்நுட்ப வல்லுநர்கள், நடிகர்கள், ஜோதிடர்கள், ஆலோசகர்கள், விமானிகள், வழக்கறிஞர்கள், சமையல்காரர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இன்று நல்ல வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். இந்த நாள் புகழ் மற்றும் ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் இலக்கை நோக்கி சரியான திசையில் செல்ல இவற்றை பயன்படுத்தவும். இன்று நிதி ஆதாயம் இருக்கும் மற்றும் சொத்து பதிவுகள் சுமூகமாக நடக்கும். பரஸ்பர நம்பிக்கையின் காரணமாக உறவு மேலும் வலுவடைந்து செழிப்பைப் பெறும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 9
தானம்: ஏழைகளுக்கு சிவப்பு மசூர் தானம் செய்யுங்கள்

ஜூன் 8ம் தேதி பிறந்த பிரபலங்கள்: ஷில்பா ஷெட்டி, ராஜேந்திர நாத், டிம்பிள் கபாடியா, அதிஷி, ரந்தீப் ராய்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி