முகப்பு /செய்தி /ஆன்மிகம் / புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

பெருமாள்

பெருமாள்

பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன்தருபவை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

புரட்டாசி மாதம் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது கோவிந்தா என்னும் திருநாமமே. அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் எளிய மக்களும் பெருமாளுக்குகந்த திருநாமங்கள் இட்டுக்கொண்டு மஞ்சள் ஆடை அணிந்து பெருமாள் கோயில்கள் சென்று வழிபடுவர்.புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது சிறப்பு. 

பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் இந்து மக்கள் சாத்விக உணவுகளை மட்டுமே உண்பார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் தங்களால் இயன்ற அளவுக்குப் பெருமாளுக்குப் படையல் போடுவர். வீட்டில் கோவிந்தா கோஷமிட்டு வேங்கடவனை வழிபடுவர். ஒரு சிலர் திருப்பதிக்கு இந்த புரட்டாசி மாதத்தில் சென்று வருவதும் உண்டு.

புரட்டாசி மாதத்தைக் கன்னி மாதம் என்று சொல்வார்கள். சூரியன் கன்னிராசியில் சஞ்சரிக்கும் மாதம். கன்னி ராசிக்கு அதிபதி புதபகவான். புதபகவானுக்கு அதிபதி திருப்பதி வேங்கடவன். புதபகவான் கன்னி ராசியில் உச்சமடைவார். எனவே புதபகவானின் அருளைப் பெற நாம் ஏழுமலையானக் கட்டாயம் வழிபட வேண்டும்.

பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன்தருபவை. சகல தோஷங்களையும் நீக்கும் வழிபாடாக ஏழுமலையான் வழிபாடு விளங்குகிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் இவற்றை கடைபிடிங்கள்:

1. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம். கொரோனா வந்த பிறகு ஆலய வழிபாடுகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே அவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசத்தோடு ஆலயம் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழிபடலாம்.

Also see... மஹாளய பட்ச அமாவாசை 2022.. பித்ரு வழிபாட்டுக்கு உகந்த நாள்..

2. இந்த புரட்டாசி மாதத்தில் பிட்சை எடுத்து பெருமாளுக்கு தளிகை போடுவது வழக்கம். அப்படி பிட்சை எடுக்கும் போதும் போடும் போதும் இருவருமே கவனமாக இருத்தல் நல்லது. பெருமாளின் அருள் இருவருக்குமே கிடைக்கும்.

3. மேலும் தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

top videos

    4. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து படையல் முன்பு வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை அன்று வெங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பு.

    First published:

    Tags: Purattasi