சபரிமலையில் ஐயப்பனுக்கு முக்கிய பூஜைகளில் ஒன்று புஸ்பாபிஷேகம். திருசன்னிதிக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை புஷ்பாபிஷேகம். அத்துடன் உத்திஷ்டகார்ய சித்திக்கு அதாவது நினைத்த காரியம் நிறைவேற புஷ்பாபிஷேகம் சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான அபிஷேகம் என்று புராணங்கள் கூறுகின்றன.
தினமும் மாலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை சபரிமலை தந்திரி தலைமையில் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. புஷ்பாபிஷேகம் நேர்ச்சையாக செய்யும் குழுவில் ஐந்து பேருக்கு சிறப்பு தரிசனம் செய்யவும் சிறப்பு பூஜைகளும் செய்யவும் முடியும். 12,500 ரூபாய் ஒரு புஷ்பாபிஷேகத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தாமரை, தெற்றி, துளசி, கூவளம், அரளி, சாமந்தி, மல்லிகை மற்றும் ரோஜா ஆகிய எட்டு வகையான மலர்கள் முக்கியமாக புஷ்பாபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழகத்தில் இருந்து கேரள எல்லையைத் தாண்டி சன்னிதானம் கொண்டு வருகின்றன.
முதலில் தமிழகத்தில் கம்பம், திண்டுக்கல், ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இருந்து நேரடியாக சேகரிக்கப்பட்டு பம்பை சென்றடையும். அங்கிருந்து டிராக்டரில் அய்யன் சன்னதிக்கு சன்னிதானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் சராசரியாக 12 புஷ்பர்ச்சனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகை ஒன்றான நவம்பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை 461 மலர்கள் அர்ச்சனை செய்யப்பட்டன. புஷ்பாபிஷேகம் தவிர, சபரிமலையில் அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், நெயாபிஷேகம், மாளிகபுறத்தில் பகவதிசேவை ஆகியவையும் முக்கிய பூஜைகள் ஆக நடைபெற்று வருகிறது.
Also see... டிசம்பர் 6: கார்த்திகை தீபம்.. போலீஸ் கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை!
காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு களபாபிஷேகமும், அதிகாலை 3.30 மணி முதல் 7 மணி வரை நெய் அபிஷேகமும் சபரிமலையில் தினசரி நடக்கிறது. இன்று 89,737 பேர் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 1,20,000 பேருக்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று 55, 145 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம்.
அதி காலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும் மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை 7 மணி வரை 25, 914 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.