முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி கோவில் தங்க கோபுரத்திற்கு புதிய பொன் முலாம் தகடுகள் பொருத்தும் பணி நிறுத்தம்

திருப்பதி கோவில் தங்க கோபுரத்திற்கு புதிய பொன் முலாம் தகடுகள் பொருத்தும் பணி நிறுத்தம்

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு புதிய பொன் முலாம் தகடுகள் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகளை பொறுத்த தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்து இருந்தது. இதற்கான பணிகள் ஜனவரி 25 ஆம் தேதி துவங்கி நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணியை ஒப்பந்தம் மூலம் பெற்ற நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த வேலையை மிகவும் மெதுவாக செய்து வருகிறது.

ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரும் நிலையில் தகடுகளை பொருத்தும் பணி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நடைபெறுவது போல் மிகவும் மெதுவாக நடைபெற்றால் பல்வேறு பிரச்சனைகளை தேவஸ்தான நிர்வாகம் சந்திக்க கூடும். எனவே ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்ட புதிய தகடுகளை பொருத்தும் பணியை தேவஸ்தான நிர்வாகம் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

இடைப்பட்ட காலத்தில் இந்த பணி தொடர்பாக சர்வதேச அளவில் டெண்டர் விட்டு தகுதியான நிறுவனம் மூலம் பொன் முலாம் பூசப்பட்ட புது தகடுகளை பொருத்தும் பணியை மேற்கொள்ள தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான டெண்டரில் குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டிப்பாக பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati