Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (30 ஜூலை 2022) நிதி நிலைமைகள் மேம்படும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (30 ஜூலை 2022) நிதி நிலைமைகள் மேம்படும்..!

money

money

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 30) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

நிதி சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இன்று மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரம் நன்றாக வளர்ச்சி அடைவதோடு, சொத்து சம்மந்தப்பட்ட விஷயங்களில் லாபத்தையும் பெறுவீர்கள்.

ரிஷபம்:

உங்கள் வியாபாரத்தில் மிகவும் நெருக்கமாக இருப்பவர், உங்கள் நம்பிக்கையை உடைக்கக்கூடும். உங்கள் போட்டியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களிம் உள்ள விலைமதிப்பற்ற பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்:

இன்று முக்கியமான பணியை முடிக்கும் போது பல விதமான தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இரு முகம் கொண்டு பழகுவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை இன்று முழுவதும் தவிர்க்கலாம்.

கடகம்:

வெளியூர் அல்லது வெளிநாட்டு சம்பந்தமான காரியங்கள் லாபத்தைத்தரும். சரியான வழியில் கடினமாக உழைத்தால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது பற்றி யோசித்தால் அதை செயல்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

சிம்மம்:

வெளிநாட்டில் வேலை கிடைக்கும் ஆசை இருந்தால், நிறைவேறும் வாய்ப்பு கிடைக்கும். சுற்றி இருப்பவர்களிடமிருந்து மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். புதிய பணியைத் தொடங்க விரும்பினால், அதை இன்று தொடங்கலாம்.

கன்னி:

தொழிலில், உங்கள் பார்ட்னர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இன்று வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். மிகவும் கடினமான நேரத்தில், உங்களின் நெருங்கிய நண்பர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.

துலாம்:

உங்கள் நிதி நிலைமைகள் மேம்படும், பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வருமானம் அதிகரிக்கும். ஆன்மீக ரீதியான நிகழ்வுகளில் பணம் செலவிட நேரிடும்.

விருச்சிகம்:

இன்று பண இழக்கும் சூழல் ஏற்படலாம். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கும்.

தனுசு:

உணவு மற்றும் ஜவுளி தொடர்பான தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் இதற்கு முந்தைய நாட்களை விட நல்ல லாபம் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் லாபத்தைப் பெறலாம்.

மகரம்:

தனிப்பட்ட பயணம் மற்றும் வணிக அல்லது தொழில் ரீதியான பயணங்கள் இன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டியாளர்கள் இன்று உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை செய்ய முயற்சிப்பார்கள். அது உங்கள் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

உங்களுடைய நிதி நிலைமை கொஞ்சம் மோசமடையலாம். தற்போது, வணிகம் அல்லது நிதி சம்பந்தமாக பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

மீனம்:

வழக்கு, சட்ட ரீதியான சிக்கல்கள் தீரும். எதிர்பாராத சூழ்நிலைகள் உங்களுக்கு திடீர் பணவரவு மற்றும் நல்ல லாபத்தைப் பெற உதவும். தினசரி வருமானம் அதிகரிக்கும். சர்வதேச பயணங்கள் செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி