Home /News /spiritual /

உங்களை எப்போதும் ஊக்கமாகவும், சிறப்பானவராவும் வைக்க உதவும் Feng shui டிப்ஸ்!

உங்களை எப்போதும் ஊக்கமாகவும், சிறப்பானவராவும் வைக்க உதவும் Feng shui டிப்ஸ்!

Feng Shui Vasthu Tips

Feng Shui Vasthu Tips

Feng shui Vastu Tips: வாழ்க்கையில் நாம் நினைத்தவற்றில் எல்லாம் வெற்றி பெறுவதற்கும், எப்போதும் ஊக்கமாக இருப்பதற்கும் சில வழிகள் உண்டு. இதை சீனர்களின் ஃபெங் சுயி (feng shui) முறை மூலம் எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
    வாழ்க்கை முழுவதும் உற்சாகமாகவும் நாம் நினைத்தை சாதிக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்கு தான் இருக்காது. ஆனால், நம்மில் பலரால் இதை செய்ய இயலாமல் போய் விடுகிறது. இதற்கு பல காரணிகள் உள்ளன. நமக்கு நாமே சரியாக பயிற்சி எடுக்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். தினசரி வாழ்க்கையில் நாம் நினைத்தவற்றில் எல்லாம் வெற்றி பெறுவதற்கும், எப்போதும் ஊக்கமாக இருப்பதற்கும் சில வழிகள் உண்டு. இதை சீனர்களின் ஃபெங் சுயி (feng shui) முறை மூலம் எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

    நிறங்கள்

    உங்கள் மனநிலையை மட்டுமல்ல, உங்களின் எண்ணத்தையும் பாதிக்க கூடிய தன்மை நிறங்களுக்கு உள்ளது. உங்கள் அலுவலக இடம் வசதியாகவும், சுறுசுறுப்பாகவும் இல்லாவிட்டால், உங்களின் வேலையில் உற்பத்தி குறைவாகவும் நீங்கள் சோகமாகவும் இருப்பீர்கள். எனவே இதை மாற்றுவதற்கு சிறந்த நிறங்களால் உங்கள் இடத்தை அலங்கரியுங்கள். ஃபெங் சுயி முறைப்படி, நல்ல ஆரோக்கியத்திற்கு பச்சை நிறத்தையும், படைப்பு ஆற்றலுக்கு வெள்ளை நிறத்தையும், நல்ல நேரம் மற்றும் மகிழ்ச்சிக்கு மஞ்சள் நிறத்தையும், பயன்படுத்தலாம்.

    தாவரங்கள்

    நீங்கள் இருக்கும் இடத்தில் சின்ன சின்ன தாவரங்களை வளர்த்தால் அது உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொண்டு வரும். ஃபெங் சுயி முறைப்படி, தாவரங்கள் நமது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. அதே போன்று சிறிய வகையான செடிகளை வாங்கி வைத்தால் அதை பராமரிக்க பெரிய அளவில் உழைப்பு தேவைப்படாது.

    ஒழுங்குபடுத்துதல்

    ஃபெங் சுயி மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒழுங்கு முறை என்பது மிக முக்கியமானதாகும். எனவே நீங்கள் இருக்கும் இடத்தை எப்போதும் ஒழுங்குப்படுத்தி வையுங்கள். அப்படி இல்லையென்றால் உங்களுக்கு வரக்கூடிய நல்ல ஆற்றலைத் இது தடுக்கிறது மற்றும் எதிர்மறையான எண்ணங்களை உங்களுக்கு தந்துவிடும். எனவே எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தி வையுங்கள். எல்லா காகிதங்களையும் புத்தகங்களையும் பேனாக்களையும் அவற்றின் இடத்தில் வையுங்கள்.

    நாற்காலி

    நீங்கள் உட்கார்ந்து வேலை செய்ய வசதியாக ஒரு நாற்காலியைப் வாங்குங்கள். நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உங்கள் நாற்காலி உயரமானதாக இருக்க வேண்டும். மேலும், நாற்காலியைத் தேர்ந்தெடுக்கும் போது அதன் ​​நிறத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். எது உங்களை நன்றாக உணர வைக்கிறதோ அதை தேர்வு செய்யுங்கள். நாற்காலியை வாசல்களுக்கு முன்னால் போட்டு ஒருபோதும் உட்காராதீர்கள். ஏனென்றால் அது உங்கள் இடத்தில் உள்ள நல்ல ஆற்றலை எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

    டெக்கரேஷன்

    நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் வீட்டைப் போல அலங்கரிப்பது நல்லது. ஏனெனில் அது உங்களுக்கு மிகவும் வசதியாகவும், வீடு போன்ற உணர்வைக் கொடுக்கும். எனவே இதன் மூலம் உங்களை மகிழ்ச்சியாகவும் இது வைத்திருக்கும். நீங்கள் விரும்பினால் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களைத் உங்கள் இடத்தில் வைத்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பிடித்த நல்ல ஓவியங்களையும் வைக்கலாம். இப்படி செய்வதால் உங்களை எப்போதும் நேர்மறையாக வைத்து, உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Astrology

    அடுத்த செய்தி