பிறந்த குழந்தைக்கு முதன்முறையாக திட உணவு கொடுக்க போகிறீர்களா? அதற்கான நல்ல நாள், நேரம் குறித்த விவரங்கள்!

குழந்தை

முதன்முறையாக குழந்தைக்கு திட உணவு ஊட்டுவதை பல இந்திய குடும்பங்கள் ஒரு சடங்குகளாகவே செய்து வருகின்றனர். திட உணவை ஊட்டும் சுப முகூர்த்த நிகழ்வை குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் நடத்தலாம்.

 • Share this:
  பிறந்த குழந்தைகக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க முடியும். அதேபோல குழந்தை வளர வளர அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளும் அதிகரிக்கின்றன. இதுபோன்ற சமயத்தில் தாய்மார்கள் குழந்தைக்கு அரிசி, பருப்பு, காய்கறி போன்ற திட உணவுகளை ஊட்ட ஆரம்பிக்கின்றனர். அதிலும் முதன்முறையாக குழந்தைக்கு திட உணவு ஊட்டுவதை பல இந்திய குடும்பங்கள் ஒரு சடங்குகளாகவே செய்து வருகின்றனர்.

  இந்த நிகழ்வு அன்னபிரஷன் சன்ஸ்கர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து பதினாறு சடங்குகளிலும் ஏழாவது மிக முக்கியமான சடங்காகும். இந்த விழாவின் போது, ​​குழந்தைக்கு முதல் முறையாக திட உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த அன்னபிரஷன் சடங்கு இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இதனை ஒரு சுப நேரத்தில் நடத்துவதே சிறந்தது என்று கூறுகின்றனர். பொதுவாக குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்கு பிறகு இந்த சடங்கு செய்யப்படும். அப்போது, ​​பிறந்த குழந்தையின் நட்சத்திரங்கள் மற்றும் ராசி நிலைகளின் அடிப்படையில் சுப முகூர்த்த தினம் கணக்கிடப்படுகிறது.

  இந்த சுப முகூர்த்தத்தில் பூஜை மற்றும் வழிபாடு நடத்திய பிறகு குழந்தைக்கு திட உணவு ஊட்டப்படுகிறது. பிறந்த குழந்தைகளின் முழு குடும்பமும் தெய்வங்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வர். பூஜை முடிந்தவுடன், பூசாரி பிறந்த குழந்தைக்கு கீர் போன்ற இனிப்பு உணவை கொடுப்பார். அதைத் தொடர்ந்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கலும் குழந்தைக்கு திட உணவுகளை ஊட்டிவிடுவர். எல்லோரும் குழந்தையை நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடனும் இருக்க ஆசீர்வதிப்பர்.

  திட உணவை ஊட்டும் சுப முகூர்த்த நிகழ்வை குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் நடத்தலாம். இருப்பினும், ஆண்குழந்தையாக இருந்தால் இரட்டைப்படை மாதங்களிலும், பெண் குழந்தையாக இருந்தால் ஒற்றைப்படை மாதங்களிலும் இந்த சடங்கினை செய்ய வேண்டும். பொதுவாக, இந்த நிகழ்வுக்கு சுக்ல பக்ஷத்தின் திவித்தியா, திரிதியா, சதுர்த்தி, பஞ்சமி, சப்தமி, தஷ்மி, ஏகாதசி, துவாதசி, துரயோதசி மற்றும் பூர்ணிமா திதி ஆகியவை மங்களகரமான நாட்களாக கருதப்படுகின்றன.

  மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஆகஸ்ட் 06, 2021)

  அதேபோல வார நாட்களில், திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை இந்த நிகழ்வை நடத்த சுபதினங்களாக கருதப்படுகின்றன. அஸ்வினி, ரோகிணி, ஆர்த்ரா, புனர்வாசு, புஷ்யா, உத்தர பால்குனி, ஹஸ்தா, சித்ரா, சுவாதி, அனுராதா, உத்திராஷத, ஷ்ரவன், தனிஷ்டா, ஷதாபிஷக், உத்தர பத்ரபாதா, மற்றும் ரேவதி ஆகியவை சுப நக்ஷத்திரங்களாக கருதப்படுகின்றன. இருப்பினும், பிறந்த குழந்தையின் நட்சத்திரத்தின் கீழ் இந்த திட உணவு ஊட்டும் சடங்கினை செய்ய வேண்டாம் என்று பஞ்சாங்கம் அறிவுறுத்துகிறது. சரி இப்போது ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் குழந்தைகளுக்கு திட உணவு ஊட்டும் சடங்கினை எப்போது செய்யலாம் என்பதை பின்வருமாறு காணலாம்.

  மேலும் படிக்க... மேகதாது அணை- கடுமையாக எதிர்க்கும் தமிழ்நாடு பாஜக..

  உங்கள் வசதிக்கேற்ப கீழ்காணும் பொருத்தமான சுபமுகூர்த்த நாளை நீங்கள் தேர்வு செய்யலாம்:

  1. ஆகஸ்ட் 11: காலை 09:23 முதல் மாலை 03:23 வரை

  2. ஆகஸ்ட் 13: காலை 05:49 முதல் மதியம் 01:43 வரை

  3. ஆகஸ்ட் 20: காலை 05:53 முதல் மதியம் 02:54 வரை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: