Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 6, 2022) குடும்ப வருமானம் அதிகரிக்கும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 6, 2022) குடும்ப வருமானம் அதிகரிக்கும்..!

பணவரவு

பணவரவு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 6) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சர்ச்சையில் இருக்கும் நிலம் அல்லது சொத்து தகராறில் இருக்கும் நிலத்தால் உங்களுக்கு செலவு ஏற்படும். இதனால் மன உளைச்சலும் உண்டாகலாம். தினசரி வருமானம் குறையலாம்.

ரிஷபம்:

இன்று குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும். செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் ஏற்படலாம். சம்பளப் பற்றாக்குறை காரணமாக நீங்கள் வேறு வேலை தேட நினைக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கூடும். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டி வரும்.

மிதுனம்:

நீங்கள் புதிதாக கூட்டுத்தொழில் தொடங்கலாம். இருப்பினும், பார்ட்னர்ஷிப் தொடங்கும் முன்பு அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இன்று வேலையில் இருப்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். யாருக்காவது கடன் கொடுப்பதற்கு முன் யோசித்துக் கொடுக்கவும். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

கடகம்:

சுற்றுலா சென்றால் நீங்கள் விரும்பாமல் இருந்தாலும் நிறைய செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இன்று உங்கள் வணிகத்தைப் பற்றிய எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பல முறை சிந்தித்து செயல் பட வேண்டும் என்பதால் அவசரப் படாதீர்கள். வாகனத்துக்காக ஏதேனும் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்கள் வரவு செலவு பட்ஜெட் பாதிக்கப்படலாம்.

சிம்மம்:

பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நஷ்டம் உண்டாகும், கவனமாக இருங்கள். சிறிய செலவுகள் அதிகரித்து உங்கள் பட்ஜெட்டை பெரிதாக பாதிக்கலாம். தனிப்பட்ட காரணங்களால் குடும்பத்தாருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சின்ன பிரச்சனைகளால் சண்டையை பெரிதாக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

கன்னி:

ஏற்கனவே புதிதாய் ஒரு தொழில் தொடங்கி இருந்தால் அது வெற்றிகரமாக இருக்கும். இருப்பினும், இன்று எந்த ஒரு புதிய தொழிலையும் தொடங்க வேண்டாம். தினசரி வருமானம் ஈட்டும் வழி கிடைக்கும். அதே நேரத்தில், செலவுகளும் அதிகரிக்கும். இன்று பொருளாதார நெருக்கடிகள் காணப்படும்.

துலாம்:

இன்று ஏதேனும் ஒரு சொத்து வாங்க உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், அதற்கு வங்கிக் கடன் வாங்க வேண்டியிருக்கும். பழைய சொத்தை விற்கவும் வாய்ப்பு உள்ளது. பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகள் குறையாது. உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அதற்காகவும் நிறைய செலவு செய்ய வேண்டி வரும்.

விருச்சிகம்:

இன்று உங்கள் நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையால் பெரிய செலவு ஏற்படும். உங்கள் சேமிப்புக் கரையும். குறைவான வருமானம் இருந்தாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால், நிதி நிலைமை மோசமடையும்.

தனுசு:

இன்று வணிகத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உங்கள் வருமானம் நேரடியாக பாதிக்கப்படும். உரிய நேரத்தில் உங்கள் தந்தை பண உதவி செய்வார். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பயணங்களால் பண விரயம் ஏற்படும்.

மகரம்:

இன்று வியாபாரத்தில் அதிமாக முதலீடு செய்ய வேண்டி வரலாம். இருப்பினும், முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வருமானம் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏற்படும் செலவுகளால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். அதே போல, வீட்டுச் செலவுகள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும். முன்பு இழந்த அல்லது உங்கள் கைக்கு வராமல் சிக்கிக் கொண்ட பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கும்பம்:

இன்று உங்கள் நண்பர்களுக்கு பண உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதை வீணான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி செலவு செய்யக்கூடும். ரியல் எஸ்டேட், குறிப்பாக நிலம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சட்ட அல்லது நீதிமன்ற விஷயங்களில் நிறைய செலவழிக்க வேண்டிய நிலை வரும்.

மீனம்:

மூதாதையர் சொத்துக்கள் இருந்தாலும் லாபம் கிடைக்காது. பண்டிகைகள், விசேஷங்களுக்கு பணம் செலவாகும். அம்மாவின்வழி உறவினர்களிடமிருந்து உங்களுக்கு பண உதவி கிடைக்கும். இன்று உங்கள் இளைய சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டியிருக்கும். பழைய கடன்களில் இருந்து விடுபடுவீர்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி