ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதியில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் இன்றுடன் நிறைவு...!

திருப்பதியில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் இன்றுடன் நிறைவு...!

திருப்பதி சொர்க்கவாசல் ஏழுமலையான்

திருப்பதி சொர்க்கவாசல் ஏழுமலையான்

Tirupati | வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் பத்தாவது நாள் ஆன இன்று நள்ளிரவு அடைக்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

வைகுண்ட ஏகாதசி நாள் முதல் ஏழுமலையானை வழிபடும் பக்தர்கள் அனைவரும் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் இன்று நள்ளிரவு 12 மணி அளவில் அடைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு ஆகியவற்றை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக திருப்பதியில் 9 இடங்களில் கவுண்டர்களை ஏற்படுத்தி நாளொன்றுக்கு 45 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் வழங்கி வந்தது.

ஆனால் பக்தர்கள் வருகை குறைந்த காரணத்தால் ஐந்து இடங்களில் மூடபட்டு மற்ற கவுண்டர்கள் செயல்பட்டன. நேற்று முன்தினம் வரை நான்கரை லட்சம் டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்காக வழங்கப்பட்டன. இது தவிர நாளொன்றுக்கு 20 ஆயிரம் என்று எண்ணிக்கையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளும், 2000 என்ற எண்ணிக்கையில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அடிப்படையில் ஆன ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கட்டுகளும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று இரவு 12:00 மணிக்கு நடைபெற இருக்கும் சிறப்பு பூஜைகளுடன் ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் அடைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டிற்கான ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் தரிசனம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

First published:

Tags: Tirupathi, Tirupati