• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • நாராயணா ஹரி கோவிந்தா... ஏகாதசி சிறப்பு பெருமாள் பாடல்கள்...

நாராயணா ஹரி கோவிந்தா... ஏகாதசி சிறப்பு பெருமாள் பாடல்கள்...

Youtube Video

ஏகாதசி சிறப்பு பெருமாள் பாடல்களின் தொகுப்பு...

  • Share this:
    இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாளை வணங்கி வழிபடும் விரதங்களில் முதன்மையானது ஏகாதசி விரதம். இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அரசர்கள் செய்யும் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிப்பது ஆகும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்று அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி என்கின்றனர். ஏகாதச எனும் வடமொழிச் சொல்லுக்கு 11 எனப் பொருள். காலக்கணிப்பில் 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. திருவாதிரை ஏகாதசியான இன்று பெருமாளின் சிற்ப்பை கூறும் இந்த பாடல்களை கேளுங்கள்...

    பாடியவர் : வீரமணிதாசன், ஹரிணி, உன்னிகிருஷ்ணன், பாம்பே சகோதரிகள், ஸ்ரீஹரி, கே.வீரமணி

    இசை: அரவிந்த், ஆர்.குருமகேஸ்வர், எல்.கிருஷ்ணன், பிரதீப்

    பாடல்கள்: ஸ்ரீராம் சர்மா, உளுந்தூர்பேட்டை சண்முகம், மேலநல்லூர் சீனிவாசன், குருநாத சித்தர், வி.ஆர்.வரதராஜன்

    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி

    தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி



     

    நன்றி: சிம்போனி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: