• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • துக்கத்தை போக்கும் துர்க்கை அம்மன்... ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும் ஏன் தெரியுமா?

துக்கத்தை போக்கும் துர்க்கை அம்மன்... ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும் ஏன் தெரியுமா?

துர்க்கை துர்+கை துர் என்றால் தீயவை என்று அர்த்தம் தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள் அதனால் துர்கை என்று பெயர் ஆனது மேலும் இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கபடுகிறாள். துர்காதேவி தீய செயல்களை அழிப்பவள் என்பதாகும்.

  • Share this:
    தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்வது துர்கை ரூபம் என்கிறது புராணம். அதனால்தான் சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் துர்கைக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டு, அங்கே சாந்நித்தியமும் சக்தியும் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிவாலயத்தில் உள்ள துர்கைக்கு சிவ துர்கை என்றும் பெருமாள் கோயிலில் உள்ள துர்கைக்கு விஷ்ணு துர்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது.

    துர்கை என்றாலே துக்கத்தையெல்லாம் அழிப்பவள் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக்கூடியவள் துர்காதேவி என்று சக்தி வழிபாடு செய்பவர்கள் தெரிவிக்கின்ரனர்.

    ராகு காலத்தில் வழிபாடு செய்ய காரணம்

    போட்டி, பொறாமை, ஏமாற்றம், சிக்கல் இவை அனைத்தும் சூழ்ந்தது தான் இந்த உலகம். ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்கை அம்மன் வழிபாடு மிகச் சிறந்த வழிபாடு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழிபாட்டையே கொண்டு வந்தார்கள் நமது முன்னோர்கள்.

    செவ்வாயன்றும், வெள்ளியன்றும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  ராகுவிற்கும் துர்க்கை வழிபாட்டிற்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.

    ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்திநேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும். அதாவது ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் கோரிய பிராத்தனைகள் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வழிபடும் முறைகளும் அதன் பலன்களும்

    எலும்பிச்சையில் விளக்கு ஏறுதல் நல்லது

    நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கிய வாறு விளக்கு இருக்க வேண்டும்.

    இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிச்சையிடக்கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம்.



    வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. இவ்வாறு 9 வாரங்கள் செய்வதால் பலன் கிட்டும்.

    மேலும் படிக்க... கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எங்கெல்லாம் ஏற்றினால் நல்லது?

    கொரோனா காலமாக இருப்பதால் துர்கையை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாமா? 

    துர்கை அம்மன் படம் வைத்தோ சிலை வைத்தோ வீட்டி வைத்து வழிபடலாம், தவறேதுமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு வீட்டில் இருந்தபடியே மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு தீபமேற்றி வாருங்கள். அரளியால் குறிப்பாக செவ்வரளியால் துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபடுவது விசேஷம்.

    எலுமிச்சை பழத்தை எடுத்து நான்காக வெட்டி, அதன் உள்ளே குங்குமத்தை நன்றாகத் தடவி, வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையிலேயே இந்த பரிகாரத்தைச் செய்யலாம். குங்குமம் தடவி தயாராக வைத்திருக்கும் அந்த எலுமிச்சையை உங்களது வலது கையில் எடுத்து, உங்களுடைய தலையை 27 முறை சுற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய வேண்டுதலை, பிரார்த்தனையை துர்கையிடம் மனதாரச் சொல்லி வழிபடுங்கள்.

    அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக கைகளாலேயே பிரித்து போட்டு விட வேண்டும். வீட்டிற்கு வெளியே சென்றுதான் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பூஜை அறையிலேயே ஒரு பாத்திரத்தில் உங்கள் தலையை சுற்றி எலுமிச்சைப் பழத்தை நசுக்கி போட்டு விடுங்கள். அதுவும் உங்கள் கைகளாலேயே. உங்களை பிடித்த கஷ்டமும் சிக்கலும் அந்த எலுமிச்சைசையுடன் விலகிச் செல்லும்.

    மேலும் படிக்க... திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: