செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டா? செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.
இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும். மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.
முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்
1. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
2. குத்து விளக்கை தானாக அணைய விடக் கூடாது, ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
நம் வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது.
3.வீட்டை இரவில் பெருகும் போது, அந்த குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது.
4. வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
5. வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது, ஈரத் துணியை உடுத்திக் கொண்டு பூஜை செய்யக் கூடாது.
மேலும் படிக்க... குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் அதன் பலன்களும்!
Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.