Home /News /spiritual /

ஆனி மாதத்தில் குடும்பத்தினர் இந்த விஷேசத்தை தவிர்ப்பது நல்லது

ஆனி மாதத்தில் குடும்பத்தினர் இந்த விஷேசத்தை தவிர்ப்பது நல்லது

வீடு குடிபோதல்

வீடு குடிபோதல்

ஆனி அடி கோலாதே ! கூனி குடி போகாதே! என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லியுள்ளனர். இதற்கு அற்தம் ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதுதான்....

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. இந்த ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குறிப்பாக இதையெல்லாம் செய்யலாம். இதையெல்லாம் செய்யக்கூடாது என்று உள்ளது. உதாரணமாக மார்கழியில் அதிகாலையிலேயே தூங்கி எழுவது நல்லது என்றும்  புரட்டாசியில் அசைவம் உண்ணாமல் இருப்பது நல்லது என்றும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதை இன்றும் நம்மில் பெரும்பாலானோர் கடைபிடித்துதான் வருகிறோம். அதுபோல ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கக்கூடாது. ஆனி அடி கோலாதே கூனி குடி போகாதே என்ற பழமொழியும் உண்டு.

அதாவது ஆனி மாதத்தில் வீடு கட்ட மனையடி சாஸ்திரம் பார்த்துமனைகோலக் கூடாது . அதாவது வாஸ்து ஆரம்ப பூஜை செய்ய கூடாது. என்பதை விளக்கவே ஆனி அடி கோலாதே என்ற பழமொழியை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். அதுபோலவே பங்குனி மாதத்தில் வீட்டிற்கு குடிபோக கூடாது. அதாவது கிரகபிரவேசம் செய்யக் கூடாது என்பதைதான் நம்
முன்னோர்கள் தெளிவாக கூனி குடி போகாதே என்று கூறியுள்ளனர்.

எலி வலையானாலும் தனி வலை என்பது போல நாம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு அதுவே லட்சியமாகவும் இருக்கும். அப்படிபட்ட வீட்டை கட்ட நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணம் மொத்தத்தையும் போட்டு கட்டுவோம். அதனால் அந்த வீடு கட்ட அரம்பிக்கும் வேலையை நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் செய்ய வேண்டும்... அப்படி கட்டும் வீட்டிற்கு நீண்ட ஆயுள் இருக்க வேண்டும் அல்லவா? மனிதனைப்போல் வீட்டிற்கும் ஆயுள் உண்டு. அத்துடன் அந்த வீட்டில் வாழும் நம் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாகவும் பிரச்னைகள் இன்றியும் வாழ வேண்டும் என்று ஜோதிட ரீதியாகவும்  வாஸ்து ரீதியாகவும் நம் முன்னோர்கள் சில விதிமுறைகளை சொல்லி சென்றுள்ளனர்.

ஆனி மாதத்தில் ஏன் வீடு கட்டக் கூடாது?

ஆனி மாத்தில் பூமி உஷ்ணமாக இருக்கும். வீடு கட்ட தொடங்கும்போது முதலில் பூமியைதான் தோண்டுவோம். அதனால் வீடு கட்டும் பணியை செய்பவர்களுக்கும் அருகில் உள்ளவர்களுக்கும்  சில உடல் உபாதைகள் வரும். அப்படி வந்தால் அது உடனே சரியாகாது. காரணம் இப்போதுதான் கத்திரி வெயில் முடிந்து பூமி முழுக்க உஷ்ணம் நிறைந்ததாக உள்ளது. என்னதான் வெயில் காலம் முடிந்து காற்று அடிக்கும் காலம் தொடங்கினாலும் வெயிலின் தாக்கமும் அதனால் ஏற்படும் உஷ்ணமும் பூமியில் இன்னும் இருக்கும்.

Also Read... திருப்பதியில் வேண்டுதலுக்காக திருமாங்கல்யத்தை (தாலி) கழட்டி உண்டியலில் போடலாமா?

அதுமட்டுமல்லாமல் சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி மாதம். ஒரு காலம் முடிந்து இன்னொரு காலம் ஆரம்பிக்க போகுது. இதனை ஜோதிட ரீதியாக சொல்லும்போது தசை மாற்றம் என்று சொல்லுவார்கள். அதனால் ஒரு தசை மாறும்போதோ அல்லது முடியும் போதோ பெரிய விஷயங்களை தொடங்குதல் கூடாது. அதில் கண்டிப்பாக ஆனி மாதத்தில் வீடு கட்ட தொடங்கக்கூடாது. ஒரு காலம் முடியும் பொழுது எந்த ஒரு நல்ல கரியத்தையும் தொடங்கக்கூடாது என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Houses Built project, Tamil

அடுத்த செய்தி