ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 செப்டம்பர் 2022) குழந்தைகளுக்கு பழங்கள் தானமாக வழங்கவும்.!

எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 செப்டம்பர் 2022) குழந்தைகளுக்கு பழங்கள் தானமாக வழங்கவும்.!

Numerology

Numerology

Numerology | செப்டம்பர் 27-ஆம் தேதியான இன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஒரு ஹீரோவை போல பெயரும், புகழும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகள் மற்றும் மேடைகளில் நீங்கள் மைக் பிடித்து பேசலாம். உங்களின் கவர்ச்சிகரமான பேச்சு எல்லோர் மனதையும் ஈர்க்கும். வணிகத்தில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தம்பதியர்கள் காதல் உறவுகளோடு மகிழ்ச்சியுடன் இருக்கலாம். அரசு அதிகாரிகள், மருத்துவர்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 1 மற்றும் 9

தானம் - குழந்தைகளுக்கு பழங்கள் தானமாக வழங்கவும்.

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உணர்ச்சிகரமான முடிவுகளை காட்டிலும், இந்த உலகின் யதார்த்த சூழலை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் சந்திரனை நினைத்து வழிபடவும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதுடன், தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீர்கள். பணியிடத்தில் மூத்தவர்களின் ஒத்துழைப்புடன் வெற்றி அடைவீர்கள். குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். அதேபோன்று ஏற்றுமதி தொழில்களிலும் லாபம் கிடைக்கும். காதல் உறவுகள் மேம்பட இருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 2

தானம் - பிச்சைக்காரர்களுக்கு சர்க்கரை கொடுக்கவும்.

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று பயணம் தான் வெற்றியைத் தேடி தரும். ஆகவே, இருக்கும் இடத்தில் நகர்ந்து, பயணத்தை மேற்கொள்ளவும். உங்கள் திறன்களுக்கான அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திட்டங்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடியதாக அமையும். ஆடைகள், நகைகள், புத்தகங்கள், தானியங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு மிக சிறப்பான நாளாகும். விளையாட்டு பயிற்சியாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்றவர்கள் இன்று சிறப்பான சாதனைகளை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 9

தானம் - கோவிலில் சந்தனம் வழங்கவும்.

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்று நீங்கள் சோர்வாக உணரும் பட்சத்தில், பால் குளியல் செய்துவிட்டு, சிவ மந்திரத்தை உச்சரிக்கவும். இது உங்களுக்கான சவால்களை குறைத்து, நிம்மதியைக் கொண்டு வரும். காதல் உறவுகளில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான நாளாகும். நிதி சார்ந்து எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மூலமாக பலன் கிடைக்கும். ஆடை உற்பத்தியில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு கீரை உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கவும்.

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்களில் தெளிவற்ற சூழல் உங்களுக்கு நிலவுகிறது என்பதால் தற்போது முதலீடுகளை தவிர்க்கவும். மற்றவர்கள் உங்கள் மனதை புண்படுத்தக் கூடிய நிகழ்வுகள் இன்று நடக்கும். அதை புறந்தள்ளுவது தான் நல்ல மருந்தாகும். நீண்ட கால பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். அதே சமயம், குடும்பத்தினரின் உதவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். போட்டித் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை

அதிர்ஷ்ட எண் - 5

தானம் - விலங்குகளுக்கு உணவளிக்கவும்.

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இன்றைக்கு கட்டாயம் பயணம் செய்யவும். நிகழ்ச்சிகள், நேர்காணல், விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா என ஏதோ ஒரு வேலையில் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கும். இன்று ஷாப்பிங் செய்ய உகந்த நாளாகும். இல்லத்தரசிகள், விளையாட்டு வீரர்கள், சொத்து முகவர்கள், சமையல் நிபுணர்கள் போன்றோருக்கு வளர்ச்சி தரக் கூடிய புதிய பொறுப்புகள் கிடைக்கும். காதல் உறவுகளால் வீட்டில் மகிழ்ச்சி திரும்பும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - கோவிலில் வெள்ளி நாணயம் வழங்கவும்.

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்கள் வாழ்க்கை துணை மூலமாக பணப்பலன் வந்து சேரும். உங்களைச் சுற்றி சதி வலைகள் பின்னப்படுகிறது என்பதால் சுற்றியிருப்பவர்களை நம்ப வேண்டாம். உங்கள் புத்திகூர்மைக்கு தகுந்த சவால்களை ஏற்றுக் கொண்டால் வெற்றி நிச்சயம். உங்கள் தாயார் மற்றும் மூத்தவர்களின் சொல்லை கவனமாக பின்பற்றி நடக்கவும். உங்களை கீழே தள்ள நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது. இன்றைய நாளில் பெரியதாக தோன்றக் கூடிய பெரும் பிரச்சினை உடனடியாக விலகி விடும்.

அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு

அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை

அதிர்ஷ்ட எண் - 7 மற்றும் 9

தானம் - வீட்டு பணியாளருக்கு பாத்திரம் வழங்கவும்.

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

பெரியதாக சிந்தித்தால், பெரிய வெற்றியை அடையலாம் என்பதே இன்றைய மந்திரம். குறிப்பாக அரசியல் கட்சி நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். பெரும் நிறுவனங்களுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்புகளுக்கு வெற்றி நிச்சயம். சொத்து ரீதியான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எனினும், அதிகமான பொறுப்புகள் காரணமாக மன அழுத்தம் உண்டாகலாம். இன்று சிட்ரஸ் பழங்களை கட்டாயம் சாப்பிடவும்.

அதிர்ஷ்ட நிறம் - பர்பிள்

அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட எண் - 6

தானம் - தேவை உள்ளவர்களுக்கு குடை வழங்கவும்.

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச்சந்தை முதலீடு போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாளாக அமையும். இன்றைக்கு நீங்கள்தான் ஈர்ப்பின் மையமாக திகழுவீர்கள். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும். அரசியல் தலைவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆக, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் இன்றைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும். மாணவர்கள், எழுத்தாளர்களுக்கு பெரும் புகழ் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை

அதிர்ஷ்ட எண் - 9

தானம் - சிவப்பு நிற பருப்பு தானம் செய்யவும்.

செப்டம்பர் 27 அன்று பிறந்த பிரபலங்கள் : மாதா அமிர்தானந்தமயி, யாஷ் சோப்ரா, ராகுல் தேவ், நாகேஷ், காயத்ரி ஜெயராம், லெட்சுமிபதி பாலாஜி,

Published by:Selvi M
First published:

Tags: Numerology