தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதமான மார்கழி மாதம் தெய்வவழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாகும். சூரியனுடைய ஓட்டத்தில் ஒரு வருடத்தில் இரண்டு அயனங்கள் உண்டு. அயனம் என்றால் பயணம். கிழக்கிலிருந்து வடக்குப் பாதை வழியாக மேற்கிற்கு சூரியன் செல்லக்கூடிய பயணம் தக்ஷிணாயனம். வடக்கு பாதை வழியாக செல்லக்கூடிய பாதை உத்தராயணம்.
இதில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் செல்லக்கூடிய பாதை தக்ஷிணாயணம். இந்த அயனத்தில் நாம் கொண்டாடும் தெய்வ விழாக்கள் அதிகம் இருக்கிறது. அதனால் நமது முன்னோர்கள் சுபநிகழ்வுகளை இந்த அயனத்தில் வரும் மாதங்களில் தவிர்த்தார்கள்.
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இந்த மாதங்களில் ஆனி, புரட்டாசி, மார்கழி , பங்குனி மாதங்களில் வாஸ்து பூஜைக்கான நாட்கள் வருவதில்லை. அதனால் இந்த மாதங்களில் வீடு மனை வாஸ்து பூஜைகள் செய்வதில்லை. அதே போல் கிரகப்பிரவேசம் கும்பாபிஷேகம் புது மனை புகுதல் போன்ற நிகழ்வுகளும் செய்வதில்லை.
மார்கழி மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை. தை மாதம் அறுவடை மாதம் எனப்படும். எனவே மார்கழி மாதத்தில் பயிர் வளரும் காலமாகும். இந்த மாதத்தில் விதை விதைப்பதில்லை. அதனால்தான் வம்ச விருத்திக்காக செய்யப்படும் திருமணமும் இந்த மாதம் செய்வதில்லை. இது பெரியோர்களுடைய நடைமுறை.
Also see... மார்கழி மாதம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன... மார்கழியின் சிறப்புகள் என்ன?
இதே போல் ஆடி, புரட்டாசி மாதங்களிலும் திருமணங்கள் செய்யப்படுவதில்லை. சிலர் ஆனி, பங்குனி மாதங்களிலும் திருமணம் செய்வதை தவிர்க்கிறார்கள். ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் குழந்தை சித்திரை மாதம் பிறக்கும் சித்திரை மாதத்தில் வெயில் காலம் என்பதால் செய்வதில்லை. புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்வதால் ஆனி மாதம் குழந்தை பிறக்கும். அது தகப்பானாருக்கு ஆகாது என சாஸ்திரம் சொல்கிறது. மேலும் புரட்டாசி மாதம் என்பது நம் முன்னோர்களை வழிபடும் மாதம், அதனால் சுபநிகழ்வுகள் செய்வதில்லை.
ஆனாலும் சாந்திரமான சம்பிரதாயம் ( அதேபோல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.) அனுசரிப்பவர்களுக்கு மார்கழி மாதம் அமாவாசை முடிந்தால் பௌஷ மாதம் தொடங்குகிறது. பௌஷ மாதத்தில் சாந்திரமான சம்பிரதாயத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்கிறார்கள். உதாரணமாக ஆந்திரா - கர்நாடகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் திருமணம் செய்கிறார்கள்.
இந்த வருடம் சாந்திரமான பௌஷ மாதம் மார்கழி 10ம் திகதி - 25.12.2022 - ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.