Home /News /spiritual /

புனித வெள்ளியை கிறிஸ்துவர்கள் அனுசரிக்க காரணம் என்ன தெரியுமா?

புனித வெள்ளியை கிறிஸ்துவர்கள் அனுசரிக்க காரணம் என்ன தெரியுமா?

புனித வெள்ளி

புனித வெள்ளி

Good Friday 2022 | கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் முறையிட்டு, அதற்காக ஆடு, மாடுகளை பலி கொடுப்பது, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ஆயிரங்கால நம்பிக்கை. இதே நம்பிக்கையை கொண்டிருந்த யூத மதத்தில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து... பிரிவினைவாதமும், பிற்போக்குவாதமும் புரையோடிக் கிடந்த யூத மதத்தில், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கடுமையான சட்ட திட்டங்களுக்கு பஞ்சமில்லை. யூதர்களை தவிர மற்ற இனத்தவர்கள் அனைவரும் கீழானவர்கள் என தீண்டாமையை கற்பித்த யூத மதம், கஷ்டங்களுக்கும், நோய்களுக்கும் பாவமே காரணம் என்றும் போதித்தது.

ஆனால், எதிரிக்கும் அன்பு செய், ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் அன்பான அணுகுமுறையும், அனைவரும் சமம் என்று அவர் போதித்த ஒற்றுமையும் யூதர்களை கொதித்து எழ வைத்தது. அத்துடன், பெருநோயால் பாடுபட்டவர்களையும், கண் தெரியாதவர்களையும், நடக்கவே முடியாதவர்களையும் தானே குணப்படுத்தினார் இயேசு பிரான்...

யூதர்களின் வணிகமயமாகிவிட்ட ஆலயங்களுக்கு எதிராகவும், வஞ்சிக்கப்படும் ஏழைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார் இயேசு கிறிஸ்து... வருமானம் கெட்டு, ஆண்டாண்டு காலமாக தாங்கள் அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கை, மழைப்பொழுதில் கரையும் மண் சுவராக மாறிவிடுமோ என அச்சமடைந்தனர் யூத மத தலைவர்கள்...

மேலும் படிக்க... Good Friday 2022: இயேசு கடைசியாக கூறிய 7 வார்த்தைகள் என்னென்ன தெரியுமா?

அரசருக்கே ஆலோசனை சொல்லும் இடத்தில் இருந்த யூத மதத் தலைவர்கள், கர்த்தராகிய இயேசு மீது பலவிதமான பொய்ப் புகார்களை அடுக்கத் தொடங்கினர். அவரை கைது செய்ய முடிவு செய்த யூத மத தலைவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு 30 வெள்ளிக்காசுகளை கொடுத்து, அவரின் இருப்பிடத்தை காட்டச் சொல்லி அழைத்துச் சென்றனர்.

கெத்சமெனித் தோட்டத்திற்கு காவலர்களுடன் சென்ற யூதாஸ், போதகரான இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் என யோவான் 18வது அதிகாரத்தில் ஒன்று முதல் 11வது வசனம் வரை விவரிக்கிறது, கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள்.

மேலும் படிக்க... புனித வெள்ளி அன்று கருப்பு நிற ஆடை அணிவது ஏன் தெரியுமா?

யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு, பிலாத்து மன்னன் முன் நிறுத்தப்பட்டபோது, அவர் மீது குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. யூத மத தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என நினைத்த மன்னனோ, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட, முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலுவை சுமக்கச் செய்து, கல்வாரி மலையின் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார் கர்த்தராகிய இயேசு பிரான்...



அப்போது அவருக்கு வயது 33... வெள்ளிக்கிழமை, வெயில் கொளுத்திய மதிய வேளையில் இயேசுவை சிலுவையில் அறைந்தபோது, உலகமே இருளில் மூழ்கியதாக கூறுகிறது பைபிள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துன்ப நிகழ்வை நினைவு கூறும் வகையிலும், அதற்கு மாியாதை செய்யும் வகையிலுமே அனுசரிக்கப்படுகிறது புனித வெள்ளி.

உலகத்தை ரட்சிக்க வந்த கர்த்தர், சிலுவையில் அறையப்பட்டு இறந்ததன் மூலம், அவா் இந்த உலகின் பாவங்கள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டாா் என நம்புகின்றனர் கிறிஸ்தவா்கள்...

மேலும் படிக்க... புனித வெள்ளியின் சிறப்புகள்...

இந்த புனித வெள்ளி ஸ்பெயின் மொழியில் 'வியா்னஸ் சான்தோ' (Viernes Santo) அதாவது பாிசுத்தமான வெள்ளி என்றும், ஜொ்மனி மொழியில் 'காா்ஃப்ரைட்டாக்' (Karfreitag) என அதாவது துன்பங்களின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, 3ஆம் நாளில் உயிர்த்தெழுந்து வின்னுலகை அடைந்ததை குறிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதுதான் ஈஸ்டர் பெருவிழா...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Good Friday

அடுத்த செய்தி