இறைவனுக்கு பூஜை செய்யும் போது விளக்கு, சூடம், பத்தி, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குவதை போல பூக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. நம்முடைய பூஜைக்கு அழகை கூட்டுவது என்றால் அது பூக்கள் தான். மலரில் உள்ள வாசனையும், அதன் தோற்றமும் கடவுளை தரிசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது.
நாம் கடவுளை வணங்கும் போது அந்தந்த கடவுளுக்கு உரிய பூக்களை கொண்டு வழிபட்டால் தான் நமக்கு முழுமையான நன்மை கிடைக்கும். என்ன மலர்களை வைத்து பூஜை செய்யலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.
பூஜைக்கு உரிய மலர்கள் எவை?
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசியை கொண்டு பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு விநாயகருக்கு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசி கூடாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த, முடி, புழு கொண்ட, காய்ந்த, உலர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது.
Also Read | இந்த ராசி பெண்களுக்கு பாசிடீவ் எனர்ஜி தானாம்..!
துளசி, வில்வம் ஆகியவற்றை அதிகமாக உபயோகிக்கலாம். அன்று மலர்ந்த பூக்களை அன்றே உபயோகிப்பது மிகச் சிறப்பு. தாமரை, அல்லி போன்ற நீரில் தோன்றும் மலர்களுக்கு விதிவிலக்கு உண்டு.
செண்பக மொட்டு தவிர, மற்ற மலர்களின் மொட்டுக்களை பூஜைக்கு உகந்தவை அல்ல. துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Flower Carpet, Guru pooja