• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • குரு - செவ்வாய் பார்த்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

குரு - செவ்வாய் பார்த்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

வலிமையான குரு மங்கள யோகம் இருக்கும் பட்சத்தில்... குரு தசை அல்லது புத்தி நடைபெறும் வேளையில் ஜாதகர் நல்ல செல்வ நிலையை அடைவார்.

  • Share this:
    குரு - மங்கள யோகம் விளக்கம்

    மங்களன் என்றால் செவ்வாயை குறிக்கும். இந்தச் செவ்வாயுடன் - குரு இணையும் போது கிடைக்கும் யோகம். குரு - மங்கள யோகம் எனப்படும். செவ்வாயும் + குருவும் நட்பு கிரகங்கள் ஆகும். அதேபோல, செவ்வாய் - குரு இவர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டால் கூட குரு மங்கள யோகத்தை ஜாதகருக்குத் தரும்.

    நல்ல நட்பு நன்மையை தான் செய்யும். அந்த வகையில் முழு பாபரான செவ்வாய், குருவுடன் சேரும் சமயத்தில் சுபத் தன்மையை அடைகிறார். இதனால், ஜாதகர் அநேக நன்மைகளை அடைவார். அதிலும், மேற்கண்ட இரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்று உச்ச அல்லது ஆட்சி வீடுகளில் அமர்ந்தால், அபரிவிதமான நல்ல பலன்களைத் தரும். அதுவே, மேற்கண்ட இரண்டு கிரகங்களில் ஏதேனும் ஒன்று பகை அல்லது நீச்ச வீடுகளில் அமர்ந்தாலும் கூட அவ்வளவு சிறப்பான பலன்களைத் தராது.

    மற்றபடி, மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு - மங்கள யோகம் அதிக அளவில் நன்மையை செய்யும்.

    மேலும் படிக்க...முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்...

    குரு, மங்கள யோகம் தரும் பலன்கள் என்னென்ன?

    1. இந்த யோகம் பெரிய மனிதர்களின் நட்பை பெற்றுத் தரும் அவர்களின் சகவாசத்தால் சிலருக்கு பெரும் நன்மைகள் கூட ஏற்படலாம்.

    2. காலப்போக்கில் சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும்.

    3. ஜாதகத்தில் காணப்படும் மற்ற தோஷங்களின் வலிமையை குறைக்கும்.

    4. வலிமையான குரு மங்கள யோகம் இருக்கும் பட்சத்தில்... குரு தசை அல்லது புத்தி நடைபெறும் வேளையில் ஜாதகர் நல்ல செல்வ நிலையை அடைவார்.

    5. தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை ஆகிய அனைத்தையும் கூட இந்த யோகம் ஒருவருக்குத் தர வல்லது.

    மேலும் படிக்க... நிவேதனத்தை கடவுளுக்கு ஏன் படைக்கிறோம் தெரியுமா?

    திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது

    இன்று சஷ்டி விரதம்...முருகனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: