எண் 11 சந்திரனுடைய எண்ணாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதன் ஆளும் கிரகமான சந்திரனின் செல்வாக்கின் கீழ் தங்கள் வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த எண்ணின் ஆளுமையில் பிறந்த நபர்களுக்கு அதிக அளவு ஆற்றல் இருக்கும். சந்திர கிரகம், தூய்மை, உணர்ச்சிவசப்படும் தன்மை, மென்மையான மற்றும் அமைதியான ஒரு கிரகம் ஆகும்.
இவர்கள் உணர்ச்சி ரீதியாக, உணர்வுபூர்வமாக மற்றவர்களுடன் இணைந்திருப்பார்கள், மற்றும் தங்களின் எமோஷனல் மகிழ்ச்சிக்காக பெரும்பாலும் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். எண் 11 சிறந்த யோசனைகளைக் கொண்டு வருவதில் அதிக திறன் வாய்ந்தது. ஆனால் அதை அடுத்தடுத்து கொண்டு செல்லவும், அவற்றைச் செயல்படுத்தவும் முடியாது. 11-ம் எண் கொண்டவர்கள் மிகவும் திறமையானவர்கள், ஆனால் அவர்களின் பதட்டமும், அதீதமான மன நிலை மாற்றமும், சாதிப்பதில் தடையாகிறது.
இவர்கள் அனைவரும் உள்ளுணர்வை வழிகாட்டியாக நம்ப வேண்டும். இந்த உணர்ச்சிகள் இவர்களை ஒரு தீவிரமான மனநிலையில் இருந்து மற்றொன்றுக்கு விரைவாகக் கொண்டு செல்லும்.
முக்கியமான வேலை அல்லது பணிக்காக அவர்கள் சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளை பின்பற்ற வேண்டும். ஆழமான சிந்தனை மற்றும் யோசனைகளை முன்வைக்கும் இவர்களின் ஒப்பிடமுடியாத திறமை, இதைப் பின்பற்றும் போது தங்கள் தொழிலில் உச்சத்தை எட்ட உதவும்.
வெற்றி பெறுவதற்கு, இவர்கள் பெரும்பாலும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில், அல்லது அலுவலக மேசையில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் திறந்த புத்தகம் போல் நடந்து கொள்ளாமல் சில விஷயங்களை உங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வளவு லட்சியம் இருந்தாலும், இந்த எண்காரர்கள் பணத்தை விட மனநிறைவைத் தரும் வேலைகளையே விரும்புவார்கள். நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால், இயக்கம் மற்றும் திரவம் தொடர்பான வணிகங்கள் சாதகமாக இருக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தைத் தரும்.
Also Read... எண் கணித பலன்கள் : இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று (27 ஜூன் 2022) கோவிலில் சந்தனம் தானம் செய்யவும்..!
சுத்தமான தங்கம், அல்லது லெதர் / தோலுக்கு பதிலாக வெள்ளை, வைரம் அல்லது வெள்ளி தங்கத்தை கடிகாரமாக அணியலாம். ஏற்றுமதி இறக்குமதி, தண்ணீர், பால், வெள்ளை, எலக்ட்ரானிக்ஸ், மென்பொருள், ஆலோசனைகள், எண்ணெய், வீட்டு அலங்காரம், அலங்காரம், ஊடகம் தொடர்பான தொழில்கள் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நிறங்கள், வெள்ளை
அதிர்ஷ்டமான நாள்: திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண்: 2
தானம்: ஏழை குழந்தைகளுக்கு பால் தானம் செய்யுங்கள்
Also Read... நியூமராலஜி: 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்....
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology