• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • பூஜைக்கு ஆகாத மலர்கள் என்னென்ன தெரியுமா?

பூஜைக்கு ஆகாத மலர்கள் என்னென்ன தெரியுமா?

துலுக்க சாமந்திப்பூ

துலுக்க சாமந்திப்பூ

விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

 • Share this:
  அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

  துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

  சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.

  கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும்.

  குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை. விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.  இந்து மதம் கூறும் பூஜைகளுக்கு உகந்த மலர்கள் மற்றும் அதன் பலன்கள்

  1. செந்தாமரை - நல்ல தனத்தையும், வியாபார விருத்தியுடன் ஆத்ம பலத்தையும் தகப்பனாருக்கு ஆயுள் பலத்தையும் , சூரிய பகாவனின் அருளையும் பெற்றுத் தரும்.

  2. சிவப்பு அரளி - தாங்க முடியாத கவலைகளைத் தீர்த்து, குடும்ப ஒற்றுமையைக் கூட்டி வைக்கும்.

  3. வெண்தாமரை - வெள்ளை நந்தியாவட்டை - மல்லிகை இருவாட்சி போன்றவை மன சஞ்சலத்தைப் போக்கும். மனதில் தெளிவு பிறக்கும்.

  4. மஞ்சள் அரளி - பொன் அரளி - இந்த மலர்கள் கடன் தொல்லையை நீக்கும். கன்னியருக்கு திருமணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். குருகிரகப் பீடையை நீக்கும்.

  5. பாசிப் பச்சையும், மருக்கொழுந்தும் நல்ல விவேகத்தையும், சுகபோகங்களையும், புத கிரக அருளையும் பெற்றுத் தரும்.  6. நீலச் சங்கு புஷ்பம் , நீலக் கனகாம்பரம் போன்றவை அவச் சொற்கள் , தீராத அபாண்டங்கள் , தரித்திரம் ஆகிய வற்றைத் தீர்க்கும். சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும். ஆயுளைப் பெருக்கும்.

  7. வில்வ புஷ்பம், கருந்துளசிப் புஷ்பம், மகிழ மலர் ஆகியவை இராகு, கேது தோஷங்களை தீர்த்து . வாழ்வில் வளம் தரும்.

  8. அடுக்கு அரளி , செம்பருத்தி போன்றவை ஞானம் மற்றும் தொழில் விருத்தி போன்றவற்றைத் தரும்.

  9. பாரிஜாதம், அல்லிப் பூ, மங்கிய வெள்ளைப் புஷ்பங்கள் சிறந்த பக்தியையும், அதிர்ஷ்டங்களையும் தரும். தாயாரின் ஆயுளை கூட விருத்தி செய்யும், சந்திர கிரகப் பிரீதியைத் தரும்.

  10. விநாயகருக்கு துளசியும், சிவனுக்கு தாழம் பூவும், தேவிக்கு அருகும், பைரவருக்கு நந்தியாவட்டையும், சூரியனுக்கு வில்வமும் ஆகாதவைகளாகும்.

  மலராது என்று தெரிந்த மொட்டுகளையும் , காலில் மிதிக்கப்பட்ட புஷ்பங்களையும் பூஜைக்குப் பயன்படுத்துதல் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது...

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: