Home /News /spiritual /

ராகு கிரகத்திற்கு சொந்தமான 13ஆம் தேதியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?

ராகு கிரகத்திற்கு சொந்தமான 13ஆம் தேதியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?

Numerology

Numerology

Numerology | பொதுவாக 13 என்பது எல்லாவற்றிலும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எண்களில் ஒன்றாக இருக்கிறது. 13-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

எண் 13 என்பது ராகு கிரகத்திற்கு சொந்தமானது மற்றும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகு கிரகத்தின் கட்டுப்பாட்டில் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். பிறந்த தேதி நேரடியாக 13-ஆக இருக்கும் போது, அது அந்த நாளில் பிறந்தவரின் அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்லாமல் மாறாக அதை அழகுபடுத்தும் கடினமான முயற்சி பற்றியதாக இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ராகு கிரகத்தால் இயக்கப்படுகிறார்கள்.

13-ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்:

பொதுவாக 13 என்பது எல்லாவற்றிலும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட எண்களில் ஒன்றாக இருக்கிறது. 13-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். நேர்மையானவர்கள், வாழ்வில் அதிக வெற்றி பெறுவதற்கான சாத்தியம் உள்ளது. இவர்கள் எச்சரிக்கையாகவும் சில விஷயங்களில் பிடிவாதமாகவும், ஒழுக்கமாகவும், உறுதியானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆன்மீகத்தையும் ஒழுக்கத்தையும் ஒருசேர கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். எதிலும் தீர ஆராயாமல் இறங்க மாட்டார்கள். மனதில் முடிக்க வேண்டும் என்று ஒரு காரியத்தை நினைத்தாள் அதனை செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். சில நேரங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் இவர்கள் பெரும்பாலும் விரக்தியடைந்தவர்களாகவும், தடை செய்யப்பட்டவர்களாகவும், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தங்களை உணர்கிறார்கள்.

குடும்பம் மற்றும் உடல்நிலை:

13-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்பத்தில் அதிக சிக்கல்கள் மற்றும் அயராமல் உழைக்கும் குடும்ப வாழ்க்கையையும் கொண்டிருக்கலாம். அடிக்கடி இவர்கள் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் மற்றும் சில நேரங்களில் ஆரோக்கியத்தில் விசித்திரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம்.வேலை:

இவர்கள் தொழில்நுட்ப ஆர்வலராகவும், தங்கள் வேலைகளை ஈடுபாட்டுடன் திறமையாக செய்து முடிக்கும் நபர்களாக இருப்பார்கள். உள்ளார்ந்த அறிவின் மூலம் பணம் சம்பாதிக்கும் தனித்துவமான திறனை 13-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் செல்வாக்கை பயன்படுத்தாமல் தங்கள் சுய அடையாளத்துடன் வேலை செய்ய விரும்புவார்கள். இதன் மூலம் இவர்கள் தொழில் அல்லது வேலைகளில் மகிழ்ச்சி மற்றும் நிறைவை பெறுவார்கள். கடின உழைப்பை வெளிப்படுத்தும் இவர்கள் எதிர்பாராத செல்வத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்படலாம். உற்பத்தி, இயந்திரங்கள், போட்டோ ஸ்டுடியோ, எலெக்ட்ரானிக், பங்கு தரகர்கள், எரிவாயு ஏஜென்சி கட்டுமானம், ஒப்பந்ததாரர்கள், பொறியியல் மற்றும் டிவி தொடர்பான தொழில் போன்றவை இவர்களுக்கு வெற்றியை எளிதாக தருகின்றன.

Also Read : சந்திரன் ஆளுமை கொண்ட 11ஆம் தேதியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ மற்றும் கிரே

அதிர்ஷ்ட தினம்: வெள்ளி மற்றும் சனி

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

நன்கொடை: கால்நடைகள் அல்லது ஏழைகளுக்கு பச்சை காய்கறிகளை தானம் செய்யலாம்

சுற்றுப்புறங்களில் உள்ள பசுமையான செடிகளுக்கு நீர் பாய்ச்சவும்

வீட்டையும் பணியிடத்தையும் எப்போதும் சுத்தமாக மற்றும் நேர்த்தியாகவும் வைத்திருங்கள்

ஐந்து முக ருத்ராக்ஷம் கொண்ட துளசி மாலை அணியவும்

அசைவம், மதுபானம், புகையிலை மற்றும் தோல் பொருட்களை தவிர்க்கவும்

Also Read : ஸ்படிக மாலையை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள்

காலை படுக்கையை விட்டு எழுந்தவுடன் உங்கள் போர்வையை மடித்து வையுங்கள்

குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்களிடம் பேச்சில் மென்மையை கடைப்பிடிக்கவும்

கோவிலில் எப்பொழுதும் ஒன்றுக்கு பதிலாக 2 தேங்காயை அர்ச்சனை செய்யுங்கள்

விலங்கு தோலில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்
Published by:Selvi M
First published:

Tags: Numerology

அடுத்த செய்தி