ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

குவிந்து கிடக்கும் ஆபரணங்கள்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

குவிந்து கிடக்கும் ஆபரணங்கள்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று பல்வேறு தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தேவஸ்தானத்தை உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை உறுதியாக கூற முடியாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில் தவிர பல்வேறு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தினமும் ஏழுமலையானுக்கு சுமார் 4 கோடி ரூபாயை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றனர்.

  இது தவிர பிரசாத விற்பனை, தங்கும் வரை வாடகை, நன்கொடைகள், தலைமுடி விற்பனை ஆகிய வகைகளில் தினமும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை வருமானமாக கிடைக்கிறது. தன்னுடைய வருமானத்தில் சுமார் 1000 கோடி ரூபாயை தேவஸ்தான நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்திற்காக பயன்படுத்துகிறது. செலவு போக மீதி இருக்கும் தொகை பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது.

  இது தவிர தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் காணிக்கையாகவும் நன்கொடையாகவும் வழங்கும் ஆபரணங்கள், தங்க நகைகள், தங்க கட்டிகள் ஆகியவற்றில் சுவாமியின் அலங்கரிப்பு பணிக்கு பயன்படாதவற்றை தேவஸ்தான நிர்வாகம் மும்பையில் உள்ள மிண்டுக்கு அனுப்பி தங்க கட்டிகளாக மாற்றி அவற்றை பல்வேறு வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளது. அந்த வகையில் சுமார் 10.25 டன் தங்கம் பல்வேறு வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு தேவஸ்தானத்திற்கு வட்டி வருவாயை ஈட்டி தருகிறது.

  இதையும் வாசிக்க : ஏழரைச் சனி என்றாலே எல்லாரும் பயப்பட வேண்டுமா.?

  தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு வங்கிகளில் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு அதிக தொகையை நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தி வைத்துள்ளது. மேலும் தேவஸ்தானத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் 963 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. இவற்றில் கல்யாண மண்டபங்கள், கோவில்கள் ஆகிவையும் அடங்கும்.

  இதுப்போன்ற வகைகளில் ஒட்டுமொத்தமாக தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மார்க்கெட் மதிப்பின்படி பார்த்தால் இந்த தொகை சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

  இவற்றில் முக்கியமான ஒரு விஷயம் ஏழுமலையான் குடி கொண்டிருக்கும் திருப்பதி மலைக்கு யாராலும் விலை மதிப்பீடு செய்ய இயலாது என்பது ஆகும். இது தவிர தேவஸ்தானத்திடம் சுமார் இரண்டரை டன் அளவிற்கு மிகவும் புராதாணமான தங்க ஆபரணங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பழங்காலத்து வைர, வைடூரியங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த பழமையான ஆபரணங்களில் உள்ள தங்கத்தின் மதிப்பு இன்றைய விலையில் தங்கத்திற்கு இருக்கும் மார்க்கெட் விலையை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும்.

  அதே போல் தேவஸ்தானத்திடம் இருக்கும் மிக பழமையான வைரம், வைடூரியம், மரகதம் மாணிக்கம் ஆகிய நவரத்தினங்களின் மதிப்பும் மார்க்கெட் மதிப்பை விட மிகவும் அதிகம். எனவே தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு இவ்வளவுதான் இருக்கும் என்று உறுதியாக கூறுவது மிகவும் கடினமான செயலாகும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Tirumala Tirupati, Tirupati