முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை, ஒவ்வொன்றுக்கும் பின்னால், ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் நம்மை வியக்க வைக்கும் பல விஷயங்கள் இருக்கும்.
குறிப்பாக விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறோம். அதற்கு காரணம் மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில், கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான், வாழை மரமும், மாவிலையும்.
அதனால்தான் இவற்றை விசேஷ நாட்களில் வீடுகளைன் முன்பு நமது முன்னோர்கள் கட்டச் சொன்னார்கள்.
வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போட வேண்டும் என கூறியுள்ளதற்கும் சில அறிவியல் காரணங்கள் உள்ளன. பொதுவாக வீட்டில் உற்பத்தியாகும் பூச்சித்தொல்லை, கொசுத் தொல்லை நீங்கவும் நாம் செய்யும் இயற்கையான வழிமுறையே இது. சாம்பிராணி மணம் பல்வேறு விதமான பூச்சிகளையும், கொசுக்களையும் எதிர்க்கும் வல்லமை கொண்டது.
வீட்டின் நிலைப்படியில் மஞ்சள் தடவுவதற்கு காரணம்
மஞ்சள் ஒரு நல்ல கிருமிநாசினி. வெளியில் வெவ்வேறு கிருமிகள் உள்ள இடங்களுக்குச் சென்று திரும்பும் நம் கால்கள்,முதலில் மிதிப்பது, நம் வாசல் நிலைப்படியைத்தான். அங்கு மஞ்சள் தடவப்பட்டிருந்தால், அது கிருமிகளை உள்ளே வரவிடாமல் தடுத்து, நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க வழிவகுக்கும்.
மேலும் படிக்க... Lord Ganesha: சித்தி-புத்தி விநாயகரை மணந்த கதை உங்களுக்கு தெரியுமா?
அடுத்து பிள்ளையார் கோவிலில் தோப்புக்கரணம் போடுவதற்கும் காரணம் உண்டு. தோப்புக்கரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், நியூரான்களும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.
தோப்புக்கரணம் போடும்போடு காதுகளைப் பிடித்துக் கொள்வதால், முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.
மேலும் படிக்க... Kitchen Vastu: சமையலறையில் உப்பு இல்லாமல் இருக்ககூடாதாம்...
கோயில்களில் மூல விக்ரகம் அமைந்துள்ள கருவறை, ஒலி அலைகள் அதிர்வடையும்படி அமைந்துள்ளது. மூல விக்கிரகத்திற்கு செய்யப்படும் அபிேஷக ஆராதனைகள், மந்திர உச்சரிப்புகள் விக்ரகத்தில் பட்டு அதிர்வடைகின்றன. இது பக்தர்களின் உடல், உள்ளத்தில் அமைதியை தருகிறது. அபிேஷகத்தின் போது எதிர் மின்னோட்டமுடைய காற்றும், ஈரப்பதமுள்ள காற்றும் வெளி வருகின்றன. இது இன்றைய விஞ்ஞானம் கூறும் உயிர்வாழ தேவைப்படும் மின்னலைகளாகும்.
துளசி, மாவிலை, வேப்பிலை போன்றவைகளிலும் அதிக மின்னுாட்டம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. துளசி தீர்த்தம் பலவித நோய்களை கட்டுப்படுத்துகிறது. ஆடியில் செய்யப்படும் வழிபாடுகளிலும் அரிவியல் ஒளிந்துள்ளது. மேலும் கோவில்களில் அரச மரத்தினை வலம் வருகிறார்கள். அப்போது அரசமரத்தின் தாமிரச்சத்தும், மின்சார சக்தியும் காற்றின் மூலமாகவும், இலையின் கூர்முனை வழியாகவும் வலம் வருவோர் உடலில் பாய்கின்றன. இது பெண்களின் கர்ப்பத்திற்கு தடையாக இருக்கும் கிருமிகளை அழிக்கின்றது.
மேலும் படிக்க... தை மாதத்தின் சிறப்புகள்
தவம் புரியும் புனிதமான மாதம் மார்கழி. அதிகாலையில் எழுந்து குளிரையும் பொருட்படுத்தாது, நீராடி இறைவனை வழிபடுகிறோம். மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் விஞ்ஞானிகள் குறிப்பிடும் ஓசோன் எனும் துாய பிராணவாயு காற்று மண்டலத்தில் அடர்த்தியாக வருகிறது. இது உயிர் வாழ்வதற்கும், உடல் உறுப்புகள் உற்சாகம் பெறவும் உதவுகிறது.
மேலும் படிக்க... காகத்திற்கு உணவு வைப்பதன் காரணம் தெரியுமா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.