ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஏழரைச் சனி என்றாலே எல்லாரும் பயப்பட வேண்டுமா.?

ஏழரைச் சனி என்றாலே எல்லாரும் பயப்பட வேண்டுமா.?

சனி பெயர்ச்சி

சனி பெயர்ச்சி

Sani Peyarchi | ஏழரை சனியால் எப்பொழுதுமே துன்பமில்லை. அதுவும் ஒரு சிலருக்கு மட்டும் தான் ஏழரை சனி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒன்பது கிரகங்களில் மிக மிக மெதுவாக நகரும் கிரகம் சனி. பொதுவாகவே ஜோதிடம் ஆன்மீகம் பரிகாரங்கள் இவற்றிலெல்லாம் பெரிய அளவு நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றாலே கொஞ்சம் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சனி நீண்டகாலம் இருப்பதால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மிக மிக அதிகம்.

சனி கொடுக்க எவர் தடுப்பார், சனி தடுக்க எவர் கொடுப்பார் என்ற சொற்றொடர்க்கு ஏற்றவாறு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருக்கும் சனியால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தீமைகள் இரண்டுமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய சனிப்பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு ஏழரைச்சனியாக, அஷ்டம சனியாக, கண்ட சனியாக பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் ஏழரை சனி என்றாலே எல்லோருமே பயப்பட வேண்டுமா, ஏழரை சனி என்றாலே துன்பம் தானா என்று கேள்வி பலருக்கும் இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால், ஏழரை சனியால் எப்பொழுதுமே துன்பமில்லை. அதுவும் ஒரு சிலருக்கு மட்டும் தான் ஏழரை சனி தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கும் வீட்டில் சனிப் பெயர்ச்சி ஆகும் பொழுது ஏழரை சனி தொடங்குகிறது. உதாரணமாக வரும் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி நடைபெறப் போகிற சனி பெயர்ச்சியின் மூலம் மீன ராசிக்கு ஏழரைச்சனி தொடங்க இருக்கிறது. அதேபோல கும்ப ராசிக்கு ஜென்ம சனியாகவும், மகர ராசிக்கு பாத சனியாகவும் மாறுகிறது. ஏழரைச் சனியில் நிச்சயமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அந்த மாற்றங்கள் எவ்வாறு எதனால் நடக்கின்றது என்பதை கொஞ்சம் ஆய்வு செய்து பார்த்தாலே இதை பற்றி பயப்பட வேண்டாம் என்று உங்களுக்கே புரியும்.

ஏழரைச் சனி என்ன செய்ய வைக்கும்?

ஏழரைச் சனி காலத்தில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது விருப்பமில்லை என்பதை கண்டுகொள்ளாமல் உங்கள் கடமைகளை செய்ய வைக்கும். எனக்கு இது பிடிக்கவில்லை என்று உங்கள் கடமையில் இருந்து தவற முடியாது. கடின உழைப்பை மேற்கொள்ள வைக்கும். நேர்மையாக இருக்க வைக்கும். நீங்கள் எந்த அளவுக்கு நேர்மையாகவும், கடினமாக உழைப்பவராகவும் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு ஏழரை சனி முடியும் காலத்தில் அவ்வளவு வெற்றி பெற்ற நபராக இருந்திருப்பீர்கள்.

இது நாள் வரை மேலோட்டமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து வந்திருந்தால் அதை தீவிரமாக மாற்றும் சூழலை ஏற்படுத்தும்.

Also Read : 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி..! பெயர்ச்சி தேதி, ஏழரைச் சனி தொடக்கம் முடிவு, முன்னோட்டம்.!

உதாரணமாக, 20களின் இறுதியில் ஒரு நபருக்கு ஏழரைச் சனி வந்தால், வேலை, வணிகம் என்று நெருக்கடிகள் அதிகமாகத் தோன்றும். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். வேலை செய்யாமல் சோம்பேறியாக இருந்தவர்களுக்கு, கண்டிப்பாக ஏதாவது ஒரு வேலை செய்தால் பிழைக்க முடியும் என்ற நிலை உண்டாகலாம். இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது, என்னால் இதை செய்யவே முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே நீங்கள் செய்தாலும், மூன்றாண்டு காலம் முடிந்து நீங்கள் பார்க்கும் பொழுது அந்த கடின உழைப்பு இருந்ததால் தான் இந்த வெற்றி, இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள், சனி அதற்கு காரணமாக இருந்திருக்கும் என்பது புரியும்.

ஏழரைச் சனியின் முதல் 2.5 ஆண்டுகள் – விரைய சனி

உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் சனி பெயர்ச்சியாகும்போது ஏழரை சனி தொடங்குகிறது. அந்த அடிப்படையில் வரும் ஆண்டு விரைய சனியாக மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

விரயம் என்றாலே செலவு. அதுமட்டுமில்லாமல் பன்னிரண்டாம் இடம் என்பது ஆன்மிகம், தூர தேசம், பயணம், செலவுகள் ஆகியவற்றை குறிக்கிறது. பன்னிரண்டாம் வீட்டில் ஏழரை சனி தொடங்கும் பொழுது அது ஜாதகரை விட அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அல்லது நெருக்கமானவர்களுக்குத்தான் அதிகமாக பிரச்சினை உண்டாகும். அது மட்டுமில்லாமல் சனியின் பார்வை படும் இடங்கள் பாதிப்பு அடையும்.

Also Read : உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்குகிறதா.? உங்களுக்கான எண் கணித பலன் இதோ..!

மூன்றாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டில் இருந்து உங்களுடைய இரண்டாம் வீட்டை சனி பார்க்கும் பொழுது குடும்பத்தில் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். இதை தான் ஏழரை சனி தொடங்கியவுடன் செலவுகள் வந்துவிட்டன என்று கூறுவார்கள்.

சனி ஏழாம் பார்வையாக கடன், எதிரிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆறாம் வீட்டை பார்க்கிறது. எனவே இதனால் தேவையில்லாமல் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.

அடுத்ததாக பத்தாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டை பார்க்கிறது. ஒன்பதாம் வீட்டை சனி பார்ப்பது நல்ல பார்வை இதனால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் தந்தைக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படலாம்.

எனவே, ஏழரை சனியில் நீங்கள் எவையெல்லாம் தேவையில்லாமல் செலவு செய்கிறோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு செலவுகளைக் குறைக்க பார்க்கலாம். அதேபோல பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் உடல்நிலை மீது அக்கறை எடுத்துக் கொண்டால், ஏழரைச் சனியால் ஏற்படும் மாற்றங்களை பெரும்பாலும் நீங்கள் எதிர்கொள்ள முடியும், அது பிரச்சனையாகவே தெரியாது.

ஏழரைச் சனியின் அடுத்த 2.5 ஆண்டுகள் – ஜென்ம சனி

2023 ஆம் ஆண்டு ஏழரை சனி ஜென்ம சனியாக கும்ப ராசிக்கு அமைகிறது. பொதுவாக இந்த காலகட்டம் தான் ஒரு நபரின் வாழ்க்கையை புரட்டி போடும் என்று பலரும் கூறுகிறார்கள். புரட்டி போடும் என்பது எப்பொழுதுமே எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமே கிடையாது. வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது என்பது நல்ல விஷயங்களாக கூட இருக்கலாம்.

Also Read : எது உண்மையான ஆன்மீகம்? சத்குரு கூறுவதை கேளுங்கள்

ஏற்கனவே கூறியுள்ளது போல சோம்பேறித்தனத்தை, மெத்தனமான போக்கை, அலட்சியத்தை கைவிட வேண்டுமென்று சனி உங்களை துரத்திக்கொண்டு இருப்பது போலத்தான் ஜென்ம சனி இருக்கும். பொதுவாகவே ஒரு ராசியில் ஒரு கிரகம் வந்து அமரும்போது அது ஜென்ம சனி, ஜென்ம குரு என்று கூறப்படுகிறது. அதாவது உங்கள் தோள்களின் மீது இந்த கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன ஜோதிடர்கள் கூறுவார்கள். தோள்களின் மீது அமர்ந்திருக்கும் பொழுது அது ஒரு பாரமாக தெரியும்.

ஜென்ம சனி மட்டுமல்லாமல், ஜென்ம குரு சஞ்சரிக்கும் போதும், வேலை அதிகப்படியான மனஅழுத்தம் மற்றும் புதிது புதிதான நெருக்கடிகளை சந்திப்பார்கள்.

ஜென்ம சனியின் பொழுது வீடு, குடும்பம், கணவன் அல்லது மனைவி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் நெருக்கடிகள் அல்லது புதிய மாற்றங்கள் ஏற்படும். வேலைபளு அதிகரிக்கும். தொழில், வேலை, பணி செய்யும் இடத்தில், என்று நீங்கள் வருவாய் ஈட்டும் அனைத்து இடங்களிலுமே நீங்கள் மிக மிக நேர்மையாக இருக்க வேண்டும். உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். உங்களுக்காக செய்து கொள்ளும் செலவுகள் திடீரென்று அதிகரிக்கலாம். குடும்பத்திடம் இருந்து விலகி இருக்கும்படியான சூழல் ஏற்படலாம். நண்பர்களை இழக்கலாம். ஆனால் இவை எல்லாமே கெட்டவை அல்லது தீய பலன்கள் என்று கூற முடியாது. இன்று உங்களுக்கு நடக்கும் விஷயத்தை நீங்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்பி பார்க்கும் பொழுது அவை எல்லாம் நல்லதுக்காகத்தான் நடந்திருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். அப்படியான ஒரு படிப்பினையைத் தான் ஜென்ம சனி உங்களுக்கு வழங்கும்.

ஏழரைச் சனியின் அடுத்த 2.5 ஆண்டுகள் – பாத சனி

ஏழரைச் சனி எவ்வளவு நெருக்கடிகளை கொடுத்தாலுமே, முதல் 5 ஆண்டு முடிந்து கடைசி 2.5 ஆண்டுகள் நிம்மதியாக உணர்வீர்கள். அவ்வளவு அனுபவங்கள் ஏழரை சனி காலத்தில் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதை வைத்துக் கொண்டு அடுத்தடுத்த காலகட்டத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் எளிதாக தெரியும். பாத சனியாக வரும் பொழுது பதினோராம் வீட்டை சனி பார்க்கிறது. எனவே லாப ஸ்தானமான பதினோராம் வீட்டை சனி பார்க்கிறது என்றால் வணிகம் மற்றும் பலவிதமான லாபங்கள் கிடைக்கும். ஒரு வழியாக ஏறி சனியின் கடைசி காலம், இப்போது தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன் என்று அனைவருமே கூறி கேட்டிருப்பீர்கள். அந்த அளவுக்கு நன்மைகளை உணர்வீர்கள். வீடு, சொத்து அமையும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பரம்பரை சொத்து, நிலம் லாபங்கள், நீண்ட காலமாக வராமல் நிலையில் தடைபட்டிருந்த அனைத்து விஷயங்களுமே இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

Also Read : புதனின் ஆதிக்கத்தில் 23 ஆம் தேதியில் பிறந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

ஏழரை சனி காலத்தில் கட்டாயம் திருமணம் நடக்கும்

பெரும்பாலானவர்களுக்கு ஜென்ம சனி அல்லது ஏழரை சனி காலத்தில் திருமணம் நடக்கும். சனி உங்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று கூறப்படும் ஏழாவது வீடு அல்லது திருமணம் சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஏதோ ஒரு விஷயத்தோடு தொடர்பு கொண்டிருந்தால், திருமண வயதில் இருப்பவர்களுக்கு ஏழரை சனி காலத்தில் கட்டாயமாக திருமணம் நடக்கும்.

உதாரணமாக ராசியிலேயே சனி இருப்பவர்களுக்கு, இரண்டாம் வீட்டில் சனி இருப்பவர்களுக்கு, அல்லது ஏழாம் வீட்டில் சனி இருப்பவர்களுக்கு, ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகம் சனியின் நட்சத்திரத்தோடு இணைந்திருப்பது போன்றவை இருந்தால், ஏழரை சனி காலத்தில் திருமணம் நடக்கும். திருமணம், குழந்தைகள் என்று குடும்பமாக செட்டில் ஆவார்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Sani Peyarchi, Tamil News