கணேஷ் ஜெயந்தி வெள்ளிக்கிழமையான இன்று பிப்ரவரி 04ஆம் தேதி நாட்காட்டியின்படி, விநாயகரின் பிறந்த நாள் மாகா மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி நாளில் பிறக்கிறது. அதனால்தான் இந்த நாளில் விநாயகர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சதுர்த்தி விரதம் இருந்து கணபதியை வணங்கினால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். பக்தர்களின் துன்பங்கள் அகலும். அவர்களின் வாழ்வில் வரும்பிரச்சனைகள், சிக்கல்கள் என அனைத்த்ம் நீக்கப்படும். கணபதியின் அருளால் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி கிடைக்கும். கணேஷ் ஜெயந்தி நாளில் செய்ய வேண்டிய எளிய ஜோதிட பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கணேஷ் ஜெயந்தி 2022 தேதி
இந்த ஆண்டு கணேஷ் ஜெயந்தி பிப்ரவரி 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்கினால் சிறப்பு. அத்துடன் விரதம் அனுஷ்டிப்பதன் மூலமும், கணேசனின் பிறந்த கதையைக் கேட்பதாலும், சொல்வதாலும் பக்தர்களின் துன்பங்கள் நீங்கி அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கணேஷ் ஜெயந்தியின் புராணக்கதை
விநாயகர் மாகா மாதத்தின் சுக்ல பக்ஷ சதுர்த்தி தேதியில் பிறந்தார், எனவே இந்த நாள் கணேஷ் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. புராணங்களின் படி, அன்னை பார்வதி ஒரு மகனை விரும்பியபோது, அவர் உடம்பிலிருந்து விநாயகரை உருவாக்கினார். அதனால் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் விநாயக ஜெயந்தி அல்லது மகா விநாயக சதுர்த்தி அன்று விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருந்தால் விநாயகப் பெருமான் தனது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களை கஷ்டங்களிலிருந்து காப்பாற்றுவார் என்பது ஐதீகம்....
மேலும் படிக்க...விநாயகர் சதுர்த்தி வரலாறு...
பூஜைக்கான நேரம்
பஞ்சாங்கத்தின்படி, இந்த மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தியில் பிப்ரவரி 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 04:38 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 05ஆம் தேதி சனிக்கிழமை காலை 03.47 வரை முடிவடையும். இந்நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கணேஷ் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
வழிபடும் முறை
வழிபாட்டு இடத்தை சுத்தம் செய்யய வேண்டும். பிறகு கோயில் அல்லது வழிபாட்டுத் தலத்தை மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும். தூண் மீது சிவப்பு துணியை விரித்து, விநாயகர் சிலையை வைக்கவும். விநாயகப் பெருமானுக்கு 21 லட்டுகளை வைத்து படைக்க வேண்டும்.
மேலும் படிக்க... சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று..
6 எளிய பரிகாரங்கள்
1. கணேஷ் ஜெயந்தியில் பூஜையின் போது விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து படைக்க வேண்டும். அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். விநாயகருக்கு மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும், எனவே விநாயகருக்கு மோதகம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
2. விநாயகருக்கு கரிகா என்றால் மிகவும் பிடிக்கும் விநாயக ஜெயந்தி அன்று அவருக்கு 21 கரிகா முடிச்சுகளையும் காணிக்கையாக்க வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீரும்.
3. கணேஷ் ஜெயந்தியின் போது, காலையில் குளித்த பிறகு, தூய இதயத்துடன் கணேஷ் சாலிசாவைப் படிக்கவும். பிறகு விநாயகரை அலங்கரிக்கவும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் பெருகும்.
4. நீங்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் அல்லது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், இதை தவிர்க்க, கணேஷ் ஜெயந்தி நாளில் வழிபடும் போது கணேஷ் கவசத்தை படியுங்கள். உடனே உங்களின் பிரச்னைகள் அனைத்து விலகிவிடும்...
மேலும் படிக்க... வெற்றிதரும் வெள்ளேருக்கு விநாயகர் வழிபாடு!
5. மத நம்பிக்கைகளின்படி, தெய்வங்களின் வாகனங்கள் மற்றும் அவற்றின் சின்னங்களை வணங்குவதன் மூலம் கடவுள்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கணேஷ் ஜெயந்தி தினத்தன்று யானை, எலிகளுக்கு உணவளிக்கவும். விநாயகரின் அருளால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
6. கணேஷ் ஜெயந்தியின் போது, சிவபெருமானுடன் கூடிய பார்வதி தேவியின் உருவம் அல்லது சிலையை வழிபடவும். உங்கள் பெற்றோருக்கு உதவி செய்யுங்கள். விநாயகர் உங்களுடன் மகிழ்ச்சியாக இருந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.
இப்படி இந்த 6 வகையான பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை செய்தால் மட்டும் போதும், அப்பறம் உங்களின் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி, மகிழ்ச்சிதான்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.