தீயவற்றை அழிக்க ருத்ர மூர்த்தியாகிய சிவபெருமானை போற்றும் இந்த மந்திரத்தை திங்கள் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும் என்பது நம்பிக்கை..
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம
தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ர மூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம்.
திங்கட்கிழமைகள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில், சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும் என்பது நம்பிக்கை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.