ஆடிப்பூரம் வந்ததற்குப் பின்னால் இருக்கும் கதையைப் பற்றித் தெரியுமா..? வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

ஆடிப்பூரம் என்றாலே மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு உகந்த நாள் என்பார்கள். இந்த நாளில் சுமங்கலிகள் விரதம் இருந்து ஆண்டாளை மனம் உருகி வழிபடுவார்கள். இவ்வாறு செய்வதற்கு என்னக் காரணம் தெரியுமா..?

ஆடிப்பூரம் வந்ததற்குப் பின்னால் இருக்கும் கதையைப் பற்றித் தெரியுமா..? வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?
ஆடிப்பூரம்
  • Share this:
ஆடிப்பூர நாளில்தான் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் துளசி மாடத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் அம்பிகை தேவிக்கு ஆடி மாதத்தில் வரும் பூரம் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்நந்நாளில்தான் அம்பிகை அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

எனவே இந்த ஆடிப்பூரத்தில் ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாளையும், அம்பிகையையும் தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைக்கும். வளையல் வாங்கி அணிவித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும்.
அதேபோல் இந்த நாளில்தான் மதுரை ஆண்டாளுக்கு வளைகாப்பு நடத்தப்படும். வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் கொண்டாடப்படவிருக்கிறது.

அதேபோல் ஆடிமாத பூர நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு இந்த நாள் மிகவும் நல்ல நாளாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது.

எனவே கோவில்களுக்கு செல்ல முடியாத பெண்கள் வீட்டிலேயே அம்பாளை நினைத்து மனம் உருகி வழிபட்டால் வீட்டில் நன்மைகள் வந்து சேரும். பெண்களின் தாலி பாக்கியம் வலுவாகும்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading