• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Diwali 2021 : தீபாவளி அன்று விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

Diwali 2021 : தீபாவளி அன்று விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இன்றைய நாளில் லட்சுமி, குபேர பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

  • Share this:
    தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்கள்தான் உள்ளது. மக்கள் தீபாவளி ஷாப்பிங், ஸ்வீட்ஸ், வாழ்த்துக்கள் பறிமாறத் தொடங்கிவிட்டனர். தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். வாஸ்து சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை. தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்கள், நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம்.

    இருளை போக்க தீபம் ஏற்றுதல்

    தீபாவளி பண்டிகையை அமாவாசை நாளில் கொண்டாடுகிறோம். இரவின் இருளைப் போக்கவும், ஒளியை அளிக்கவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இன்றைய நாளில் லட்சுமி, குபேர பூஜை செய்து வழிபடுவது இந்தியாவின் பல பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நாம் நம்முடைய வீட்டுக்குள் நேர்மறை சிந்தனையை வரவேற்கிறோமா அல்லது எதிர்மறை சிந்தனையை வரவேற்கிறோமா என்பது நாம் விளக்குற்றும் இடத்தைப் பொருத்து மாறுபடும்.

    விளக்கேற்ற தகுந்த இடங்கள்: 

    1.முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.

    2.துளசி செடி பெருமாளுக்கு உகந்ததாகும். அதில் மகா லட்சுமி வாசம் செய்கிறாரள். எனவே, அடுத்தது துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் துளசி செடி வளர்க்க வாய்ப்பு இல்லை என்று உள்ளவர்கள் சமையல் அறையில் விளக்கேற்றலாம்.

    3. செல்வம், வளத்தை வரவேற்க விளக்கை வடகிழக்கு பார்த்தபடி வைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கிழக்கு பக்கம் பார்த்தபடியும் விளக்கேற்றலாம்.

    மேலும் படிக்க... செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு செய்தால் இத்தனை நன்மைகளா?

    4. வீட்டு தண்ணீர் தொட்டி அருகில் விளக்கேற்ற வேண்டும். இது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்கச் செய்யும்.

    5. இந்திய பாரம்பரியத்தில் விளக்கேற்றும் நேரம் மிக முக்கியமானதாகும். வீட்டில் விளக்கேற்றி ஒளி வீடு முழுவதும் பரவினால்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது நம்பிக்கை. எனவே, கடமைக்கு விளக்கு வைத்துவிட்டு அனைத்துவிட வேண்டாம். குறைந்தது பூஜை அறையில் பற்ற வைத்த நெருப்பாவது இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.

    மேலும் படிக்க...  தீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய வழிமுறைகளும் நேரமும்!

    6. பாசிடிவ் வைப்ரேஷன் கிடைக்க பித்தளை அல்லது மண் விளக்குகளை வைக்க வேண்டும். நேர்மறை ஆற்றலை வீட்டுக்குள் ஈர்க்கும் ஆற்றல் பித்தளை விளக்குகளுக்கு உண்டு. தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குகளுக்கு உண்டு.

    7. விளக்கேற்றும் எண்ணெய், நல்லெண்ணய்க்கு பதில் பசு நெய் வைத்து விளக்கேற்ற வேண்டும். பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.

    மேலும் படிக்க...   Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள்...

    தீபாவளி உருவான கதை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: