• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருப்பதி இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் விநியோகம்... முன்பதிவு செய்வது எப்படி?

திருப்பதி இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் விநியோகம்... முன்பதிவு செய்வது எப்படி?

திருப்பதி

திருப்பதி

இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • Share this:
    திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக இன்று காலை ஒன்பது மணிக்கு இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமலை ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான டோக்கன்கள், திருப்பதி பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாசா வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது. நாள்தோறும் கொடுக்கப்படும் 8 ஆயிரம் டோக்கன்களுக்காக, அங்கு 30 ஆயிரம் பக்தர்கள் குவிந்து வந்தனர். இதனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் சூழல் உருவானதால், 26ம் தேதி முதல், இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஆன்லைனிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இடையூறுகள் இல்லாத வகையில் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக தொழில்நுட்ப வசதியை வழங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: