Home /News /spiritual /

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழாவின் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது...

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச விழாவின் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது...

தருமபுரம் ஆதீனம் தேர்

தருமபுரம் ஆதீனம் தேர்

Dharumai Adheenam Therottam | தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற  பட்டணப் பிரவேச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது...

    மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா. ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, மற்றும் ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

    இந்த ஆண்டு திருவிழா  கடந்த 12ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம்  காலை துவங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

    அதனை அடுத்து தீபாராதனைக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆதீன கட்டளை தம்பிரான்கள் முன்னிலையில் நடைபெற்ற திருத்தேரோட்டத்தில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தருமபுரம் ஆதீனத்தின் நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

    தேர் திருவிழாவை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், ஆதி குரு முதல்வர் குருபூஜை விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சி இரவு நடைபெறுகிறது.

    Also see...சிவனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேச பல்லக்கு விழாவிற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு பல்வேறு ஆதீனகர்த்தர்கள் அரசியல் பிரமுகர்கள் ஆன்மீகவாதிகள் கண்டனம் தெரிவித்ததால் தடை விலக்கப்பட்டு பட்டணப் பிரவேச விழா 22 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. .
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி