ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தனுசு ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

தனுசு ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

 தனுசு ராசி

தனுசு ராசி

குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11-48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. கணித்தவர்: காழியூர் நாராயணன்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :

  கூர்மையான மதிநுட்பம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே!

  சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பீர்கள். நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். பெரியோர்களிடமும், சான்றோர்களிடமும், செல்வாக்கு படைத்தவர்களிடமும் விசுவாசிகளாகவும், நண்பர் -களாகவும் இருப்பீர்கள். இந்த குரு பெயர்ச்சி பல முன்னேற்றங்களை தரும். குருபகவான் இதுவரைஉங்கள் ராசியில் இருந்து சிற்சில இன்னலை கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் வந்திருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரச்சினையை சந்தித்து கொண்டே இருந்திருப்பர். இந்த நிலையில் தான் குருபகவான் 2-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார்.

  இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்டு வந்த இடர்பாடுகள் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம் .பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.

  அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஆனால் அவர் 42021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். பிறகு அவர் 2021 நவம்பர் 13-ந் தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும்.

  ALSO READ |  துலாம் ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

  ஆனால் இந்த காலக்கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும் தேவைகள் பூர்த்திஆகும்.பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.

  அதன்பிறகு2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 4-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.அவர் மனஉளச்சலையும்,உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார் மற்றகிரகங்களின் நிலை சனிபகவான் இப்போது உங்கள் ராசியில் இருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்படலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

  உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம்.வெளியூர்வாசம் இருக்கும்.ஆனால்அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்தபார்வையால் அவர் காரிய அனுகூலத்தை -யும்,பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தருவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந் தேதி அன்று உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.

  அவர் குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார்.பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால் அவரின் 10-ம் இடத்துப்பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிகஉறுதுணையாக இருப்பர். ராகு இப்போது 6-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம்.அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். காரிய அனுகூலத்தை கொடுப்பார்.

  ALSO READ |  சிம்மராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

  மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான கும்பத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும். அவரது பார்வையால் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.

  கேது நன்மை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல.இவரால் பொருள் விரையம் ஏற்படலாம்.உடல் உபாதைகள் வரலாம். அதற்காக கவலைகொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான ரிஷபத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும்.  இனி விரிவான பலனை காணலாம். ராகு, குருவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.

  பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருவால் ஏற்பட்ட மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண்அலைச்சல் முதலியன மறையும்.எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். 2021 ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர்14-ந் தேதிவரைசிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.

  ALSO READ |  விருச்சிக ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

  உத்தியோகத்தில் வேலைப்பளு, வீண்மனக்கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம் சகபெண் ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் எந்தவித தொய்வும் இருக்காது. 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.

  பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் அனாவசிய செலவை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். குருவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். தடையின்றி முன்னேறலாம்.வீண்விரையம் தடைபடும். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார்.வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.

  பங்குவர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை பொருள் விரையம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டுபோன்றவை கிடைக்கும்..

  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிக்கும் . வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடை கொடுப்பர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை சிரத்தை எடுத்து படித்தால் பலன் கிடைக்கும்.

  விவசாயிகள் மஞ்சள், கொண்டைக்கடலை, உளுந்து மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள்குரு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறலாம். சகோதரிகளால் பணம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்தில் குறை இருக்காது.

  ALSO READ |  துலாம் ராசி : குருப் பெயர்ச்சி பலன்கள் 2020

  2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021செப்டம்பர் 14-ந் தேதி வரை குடும்ப ஒற்றுமைக்காக சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர செலவை தவிர்க்கவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். உடல்நலம்: சீராக இருக்கும். கேதுவால்பித்தம், மயக்கம் போன்ற சிற்சில உபாதைள் வரலாம்.

  பரிகாரம்- சனிபகவானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம்.

  விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள் கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை குருபகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Gurupeyarchi, Rasi Palan