முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதியில் குவிந்த பக்தர்கள் : இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருப்பு!

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் : இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருப்பு!

திருப்பதி (FILE)

திருப்பதி (FILE)

Tirupati | இலவச தரிசனத்திற்காக நேரடியாக திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி கும்பிட 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati NMA, India

இலவச தரிசனத்திற்காக திருப்பதி வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் பக்தர்கள் வரிசையில் சென்று இலவசமாக ஏழுமலையான வழிபடலாம். இது தவிர டோக்கன்களை வாங்காமல் திருப்பதி மலைக்கு நேரடியாக செல்லும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் காத்திருந்தும் ஏழுமலையானை இலவசமாக வழிபடலாம்.

நேற்று இரவு முதல் டோக்கன்கள் வாங்காமல்

திருப்பதி மலைக்கு சென்ற பக்தர்கள் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் சாமி கும்பிடுவதற்காக 10 அறைகளில்

காத்திருக்கின்றனர்.

எனவே தற்போதைய நிலவரத்தின்படி இலவச தரிசன டோக்கன்களை வாங்காமல் திருப்பதி மலைக்கு வந்தால் 24 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும். இந்த நிலையில் நேற்று 78,340 பக்தர்கள் ஏழுமலையான வழிபட்டு கோவில் உண்டியலில் 4  கோடியே 30 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati