மகா சிவராத்திரி தினமான இன்று உபவாசம் மேற்கொள்வது, சிவலிங்க வழிபாடு செய்வது, இரவு முழுவதும் சிவ நாம ஜெபம் செய்து விழித்திருப்பது ஆகியவை பிறவி பேரிலிருந்து ஒரு மனிதனுக்கு விடுதலை அளிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இன்று பக்தர்கள் உபவாசம் மேற்கொண்டு கோவிலுக்கு சென்று சிவலிங்க வழிபாடு செய்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவ நாம ஜெபம் செய்வது வழக்கம். அதனால் மகாசிவராத்திரி தினத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக மறுபிறவி ஏற்படாது என்பது பக்தர்களின் அசைக்க இயலாத நம்பிக்கை.
எனவே மிகவும் தொன்மையான சிவன் கோவிலான காளஹஸ்தியில் இருக்கும் வாயு லிங்கேஸ்வரர் கோவிலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி வழிபாடு நடத்தினர்.
இதன்காரணமாக காளஹஸ்தி கோவில் வளாகம் முழுவதும் மனித தலைகளாகவே காணப்பட்டன. அதிக அளவில் பக்தர்கள் வருகை காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி வழிபாடு நடத்தினர்.
பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது காளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு நந்தி வாகன சேவை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.