நாளை ஞாயிறு மற்றும் கோடை விடுமுறை ஆகியவற்றின் காரணமாக திருப்பதி மலைக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர்.
இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக திருமலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தாலும் தங்கும் அறைகள் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலவச தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் 30 மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக இரண்டு லட்டுக்கள் மட்டுமே ஒவ்வொரு பக்தருக்கும் தற்போது வழங்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே கூடுதல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என்று வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.