• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • தீபத்திருநாள் அன்று திருவாண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தீபத்திருநாள் அன்று திருவாண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

திருவண்ணாலை அண்ணாமலையர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று பக்கர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • Share this:
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு முழுவதும் ஏராளமான திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவை காண தமிழகம், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக கார்த்திகை தீபத்திருவிழாவின் 10 நாட்கள் காலை மற்றும் இரவு நடைபெறும் பஞ்சமூர்த்திகளின் மாடவீதியுலா அண்ணாமலையார் திருக்கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் நடைபெற்றது. மேலும் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஆகிய நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தீபத்திருவிழா நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருக்கோயில் அதிகாரிகள், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Also Read : செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு செய்தால் இத்தனை நன்மைகளா?

    இந்தாண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. வருகின்ற 19ம் தேதி அதிகாலையில் பரணி 4 மணிக்கு தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். தொடந்து இரண்டாவது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறும் பஞ்சமூர்த்தி ஊர்வலங்கள் அண்ணாமலையார் திருக்கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் நடைபெறும் என்றும், மேலும் பரணி தீபம் மற்றும் மகாதீப நாளான 19ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த மாதம் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை மற்றும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் 10,000 பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: