Home /News /spiritual /

திருப்பதி மலைக்கு தரிசன டிக்கெட்டுகள் இல்லாமலேயே செல்ல பக்தர்களுக்கு அனுமதி...

திருப்பதி மலைக்கு தரிசன டிக்கெட்டுகள் இல்லாமலேயே செல்ல பக்தர்களுக்கு அனுமதி...

திருப்பதி

திருப்பதி

Tirupati | திருப்பதியில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் தரிசன டிக்கெட்டுகள் இல்லாமலேயே திருப்பதி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது.

    இலவச டோக்கன்களை வாங்குவதற்காக மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனவே பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் விஜிலன்ஸ் துறையினர், போலீசார் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பக்தர்கள் எனவே அவர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டி அடிப்பது சரியான செயலாக இருக்காது .

    எனவே அவர்களை சமாதானம் செய்து அனுப்பும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் பக்தர்கள் திருமலைக்கு செல்ல வேண்டும் என அடம் பிடித்தனர் .

    எனவே வேறு வழியில்லாத நிலையில் டிக்கெட்டுகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் திருமலைக்கு செல்லலாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை திருமலைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் படிக்க... கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை வாகனம் மதுரை புறப்பட்டது...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirupati

    அடுத்த செய்தி