Home /News /spiritual /

முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதி உண்டா?

முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதி உண்டா?

சபரிமலை

சபரிமலை

Sabarimalai Online Booking: ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களையும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் கேரள அரசிடம் கோரியுள்ளார்.

    சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலையில் தினசரி 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் பக்தர்களுக்காக கேரள அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

    அதாவது, பக்தர்கள் சபரிமலைக்கு பெருவழிப் பாதை வழியாக வருவது வழக்கம். ஆனால் கொரோனா தாக்கம் முழுமையாக மாறாததால் அந்தப் பாதை அடைக்கப்பட்டுள்ளது. எனினும் மகரவிளக்கு காலத்தில் பக்தர்களை இந்தப் பாதையில் அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் படிக்க... மார்கழி: செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை!

    மேலும் பம்பையில் குளியல், நீலிமலை பாதையில் பயணம், சன்னிதானத்தில் தங்க அனுமதி என தளர்வுகளை கேரள அரசு ஏற்கனவே அளித்துள்ளது. அதே நேரத்தில் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர், சான்றிதழுடன் வரும் பக்தர்களை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று தேவசம்போர்டு சார்பில் மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

    ஆன்லைன் முன்பதிவு இப்படியே தொடர்ந்தாலும், முன்பதிவு செய்யாத பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் தேவசம் போர்டின் விருப்பம். இதில் அரசு நல்ல முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் அந்த கோரிக்கையில் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க... மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sabarimalai, Sabarimalai Ayyappan temple

    அடுத்த செய்தி