2வது திருப்பதி என்று அழைக்கப்படும் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் தேரோட்டம்
2வது திருப்பதி என்று அழைக்கப்படும் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் தேரோட்டம்
திருவந்திபுரம்
Devanatha Swamy Temple therottam | திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இன்று காலை திருத்தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருவந்திபுரம் பகுதியில் நடு நாட்டு திருப்பதி என்று அழைக்கக் கூடிய தேவநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 2 வது திருப்பதி என அழைக்கபடும் இந்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில்சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி 4 முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் நான்கு வீதியிலும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். ஏராளமான மக்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.