Home » News » Spiritual » DETAILS OF ADI FRIDAY SPECIALS VAI

ஆடி வெள்ளியின் சிறப்புகள் என்ன? வழிபாடு செய்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி வெள்ளியின் சிறப்புகள் என்ன? வழிபாடு செய்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
ஆடி மாதத்தில் அவதரித்த ஆண்டாள் - திருமணமாகதவர்கள் வணங்குவதற்கு உகந்த அம்மன்
  • Share this:
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில் 4வது மாதமான ஆடி மாதம் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் கன்னி பெண்களும் திருமணமான சுமங்கலிகளும் தவறாமல் விரதம் இருந்து வருவது நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை.

அதிலும் ஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்மனை தரிசித்து வந்தால் கன்னி பெண்களுக்கு திருமணமாகும் என்றும் சுமங்கலி பெண்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருவது வழக்கம்.


அற்புதமான இந்த ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஆடி மாதத்தில் வருகின்ற நான்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1. ஆடி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பான பலன் தரும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், அன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு அல்லது பழம், பால் மட்டும் சாப்பிடுவதாலும் விரதம் இருந்த பலனை பெறலாம்.

2. ஆடி வெள்ளிக்கிழமை  விரதம் இருப்பதால் கிரக தோஷங்களால் வருகின்ற பாதிப்புகள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அத்துடன்  கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழி உண்டாகும்.3. நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் விரைவில் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.

4. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தகுந்த வேலை கிடைக்காமல் கஷ்டபட்டவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். நல்ல லாபம் கிடைக்கும்.

ஆடி வெள்ளி குறித்து அனிதா குப்புசாமி தரும் விளக்கம்



5. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். இந்த ஆடி வெள்ளிக்கிழமை விரதத்தை குறிப்பாக திருமணமான பெண்கள் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தாருக்கும் அனைத்து விதமான நன்மைகள் உண்டாகும்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading