முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சூரியனும் தமிழ் மாதங்களும்!

சூரியனும் தமிழ் மாதங்களும்!

சூரியன்

சூரியன்

சூரியனை வைத்துத் தான் தமிழ் மாதங்களும், அந்த தமிழ் மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வமும் கணக்கிடப்படுகிறது.

  • Last Updated :

தமிழ் வருடங்களில் வெவ்வேறு மாதங்கள் வெவ்வேறு அளவான நாட்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவையெல்லாம் வெறுமனே எழுந்தமானமான கணிப்புகள் அல்ல. இவற்றைக் கணிப்பதற்கென்றே பிரத்தியேகமான வானியற் கணிப்பு முறைகள் சைவ ஆகம நூல்களில் விரிவாக உள்ளன. தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றின் பெயரும்கூட எழுந்தமானமாக இல்லாமல் காரணப் பெயராக வானியல் விஞ்ஞானரீதியில் அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த மாதங்களில் வரும் பௌர்ணமி முழு நிலவு தொடர்புறும் நட்சத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.

சூரியனை வைத்துத் தான் தமிழ் மாதங்களும், அந்த தமிழ் மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வமும் கணக்கிடப்படுகிறது. உதாரணமாகச் சொன்னால் மேஷ ராசியில் சூரியன் வரும் காலம் சித்திரை, அந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதற்குக் காரணம் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகிறார் என்கிறது ஜோதிட நூல்கள். (ராசிச்சக்கரத்தில் சூரியன் உச்சம் அடைவது என்பது சூரியன் அதீத பலத்துடன் இருப்பதாக அர்த்தம்) . இதற்கு மாறாக ஐப்பசி மாதத்தில் சூரியன் நீசம் அடைகிறது. (அம்மாதத்தில் சூரியன் துலா ராசியில் இருப்பார். அது அவருடைய நீச வீடு) எனவே வெயிலின், தாக்கம் அவ்வளவு இருக்காது. மழை பொழியும்.

அது போல, கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பது புரட்டாசி மாதம். கன்னி ராசி புதனின் உச்ச வீடு (புதனுக்கு பெருமாளே இஷ்ட தெய்வம் எனக் கருதப்படுகிறது. எனவே அந்நேரத்தில், பெருமாள் குடி கொண்டு இருக்கும் திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கும்).

மேலும் படிக்க... எலுமிச்சையின் ஆன்மீக மகத்துவம்!

இதே போல, ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சாரம் செய்வார். கடகத்தில் சந்திரன் ஆட்சி பலம் பெறுகிறார். சூரியன் சிவனின் அம்சமாகும். சந்திரன் சக்தியின் அம்சமாகும். ஆடி மாதத்தின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் வீட்டில் ( கடக ராசியில் ) சஞ்சரிப்பதால். அம்மன் கோயில்களில் வழிபாடு கலை கட்டுவதுடன், அம்மாதத்தில் வரும் அமாவாசையும் ( ஆடி அம்மாவாசை) சிறப்பாக கருதப்படுகிறது.

இதே போல தனுசு ராசியான குருவின் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்யும் போது, குரு பகவான் மங்களத்தைத் தரும் கிரகம், ஆக அதுவே மார்கழி மாதம் எனப்படும். அதுபோல, மகரத்தில் சூரியன் வரும் காலம் , ஐயப்பன் கோயில்களில் மகர விளக்கு பூஜை நடக்கும். காரணம் அது சனியின் வீடு. அதனால் தான் கருப்பு வஸ்த்திரம் அணிந்து அன்னதானம் செய்து மலைக்கு செல்கின்றனர் பக்தர்கள். ஆக, ஜோதிடமும் வானவியலும் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தம் கொண்டது தான். மொத்தத்தில் ஜோதிடம் மூட நம்பிக்கை அல்ல.

மேலும் படிக்க... ஆச்சரியமளிக்கும் பல அதிசயங்களை கொண்ட தமிழ்கோயில்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Hindu Temple, Tamil