Home /News /spiritual /

ஹோரை என்றால் என்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? முழு விபரம்...

ஹோரை என்றால் என்ன? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? முழு விபரம்...

செவ்வாய் சிக்கிரன் சேர்க்கை

செவ்வாய் சிக்கிரன் சேர்க்கை

ஜோதிடத்தில் ஒவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தில் ஹோரை நேரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த ஹோரை நேரம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தினால் பலன்கள கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்....

மேலும் படிக்கவும் ...
    ஜோதிடத்தில் பலவிதமான முறைகள் இருக்கின்றன. அவற்றில், மிக முக்கியமானது ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

    அதன்படி, நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன் , குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது ஒருமணி நேரம். இந்த சொல்லில் இருந்துதான் அதாவது ஹோரை என்பதில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாகச் சொல்லுவார்கள்.

    ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.

    உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.

    பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.

    ஹோரைகளின் சுப மற்றும் அசுப பலன்கள் :

    ஹோரைகளைக் கணக்கிடும் போது சூரிய உதயம் முதல் ஒவ்வொரு ஹோரையும் கொடுக்கும் பலனை வைத்து தான் கணக்கிடப்படுகிறது. ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் நட்பு மற்றும் பகை என உண்டு. அதன் அடிப்படையில் நல்ல சுப பலன் தரக்கூடிய ஹோரை என்றும், அசுப பலன் கொடுக்கும் ஹோரை தோஷம் என்றும் கூறுகிறோம்.

    மேலும் படிக்க... திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஐஆர்சிடிசி ஏற்பாடு

    ஒவ்வொரு ஹோரைக்கும் உரிய கடவுளை வணங்கி, அதற்குரிய பரிகாரத்தை செய்யலாம், அதோடு மற்ற தோஷங்களைப் போல் இல்லாமல் ஹோரை தோஷம் பெரிதாக பயப்படக் கூடியது அல்ல என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி