• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ரத்தினக் கற்கள் என்றால் என்ன? எந்த ராசிக் காரர்கள் எந்தெந்த ரத்தினக் கற்களை அணிந்தால் நல்லது..

ரத்தினக் கற்கள் என்றால் என்ன? எந்த ராசிக் காரர்கள் எந்தெந்த ரத்தினக் கற்களை அணிந்தால் நல்லது..

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்கல் அதிக பலன்களைக் கொடுக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

  • Share this:
    ரத்தினக் கற்கள் என்றால் என்ன?

    ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு ரத்தினக் கல் உண்டு. அந்த ரத்தினைக் கல்லை அணிவதால் அந்தந்த கிரகத்தின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அனுபவத்திலும் இது பற்றிய நிறைய ஆராய்ச்சிகள் வெளி வந்து கொண்டு இருக்கிறது. ரத்தினக் கற்கள் கண்டிப்பாக பிரச்னையை தீர்க்க வல்லது. ஆனால் இதனை ஒரு நல்ல அனுபவம் மிக்க ஜோதிடர் வழிக்காட்டிய பிறகு தான் அதாவது அவரது அறிவுரையின் பேரில்தான் ரத்தினக் கல் போட வேண்டும். நீங்கலாக ராசிப் படி ஏதோ ஒரு ரத்தினக் கல்லை வாங்கிப் போட்டால் அது நல்லதல்ல. காரணம் ரத்தினக் கல் கூட பக்க விளைவுகளை தரக் கூடியது. அதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு.

    கோகினூர் வைரம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகிலேயே அதிர்ஷ்டம் கொண்ட வைரம் இது தான். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது இந்த துர்பாக்கிய வைரம். இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது, மேலும் அவர்கள் இதை போர் நேரத்தில் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பாழ்படுத்தினர்.

    மேலும் படிக்க... நீங்கள் பெரிய கோபக்காரரா? - இதைப் படியுங்கள்!

    இது இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது. அன்றைய தினத்தில் இருந்து உலகம் முழுவதும் கொடிகட்டிப் பரந்த பிரிட்டன் சாம்ராஜ்யம் சிதறி இன்று ஒரு சிறு தீவாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

    பின்னர் அந்தக் கல் ஆப்கானிஸ்தானின் அஹ்மத் ஷா அப்தாலியின் கைகளுக்கு வந்தது. சிங்க மராத்தியர்களை பானிபட் போரில் வென்ற அப்தாலி கோஹினூர் வைரம் வந்த பின் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தான். அவனது சொந்த ஊரான ஆப்கானிஸ்தானில் கூட கலவரங்கள் உண்டானது. யாராரோ ஆட்சியை கைப்பற்றி இறுதியில் 1830 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானின் பதவியிறக்கப்பட்ட ஆட்சியாளர் ஷா ஷூஜா, கோஹினூர் வைரத்துடன் தப்பியோடினார்.

    பின்னர் அவர் லாஹூர் வந்தடைந்து பஞ்சாப்பின் சீக்கிய மஹாராஜா (அரசன்) ரஞ்ஜித் சிங்கிடம் அதை அளித்தார்; அதற்குப் பதிலாக மகாராஜா ரஞ்ஜித் சிங் ஆப்கானை மீண்டும் வென்று ஷா ஷூஜாவை மீண்டும் அரியணை ஏற்றினார். ஆனால், ரஞ்சித் சிங் கிற்கு பிறகு சீக்கிய சாம்ராஜ்ஜியம் கோஹினூரின் ஆற்றலால் வீழ்ச்சி அடையத் துவங்கியது. இறுதியில் பிரிட்டன் பஞ்சாப்பை கைப்பற்றி இந்த வைரத்தை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். அதில் இருந்து உலகம் முழுவதும் கட்டி ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ்ச்சியை அடைந்தது. இப்போது பிரிட்டனின் அருங்காட்சியகத்தில் இந்த வைரம் அமைதியாக உள்ளது. அதனால் ஜோதிடரிடம் நன்றாக கேட்டு வாங்கி போட்டால் நல்லது.

    மேலும் படிக்க... என்னென்ன ராசிக் காரர்கள் எந்தெந்த திசையில் வீட்டை அமைத்தால் நல்லது...

    சூரிய பகவான்


    ஒவ்வொரு ராசிக் காரர்கள் எந்தெந்த தெய்வத்தை வழிபடுவது நல்லது?

    1. சிம்ம ராசிக் காரர்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் மாணிக்கம் போடலாம்.

    2. கடக ராசிக்காரர்கள் ஜாதகத்தில் சந்திரனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் முத்து போடலாம்.

    3. மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் ஜாதகத்தில் புதனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் மரகதப் பச்சை போடலாம்.

    4. ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் வைரம் போடலாம்.

    5. மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் பவளம் போடலாம்.

    6. தனுசு, மீனம் ராசிக்காரர்கள் ஜாதகத்தில் குருவின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் கனக புஷ்பராகம் போடலாம்.

    7. மகரம், கும்பம் ராசிக் காரர்கள் ஜாதகத்தில் சனியின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் நீலக் கல்லை போடலாம்.

    8. இதே வகையில் ராகு, கேதுவின் நிலைப்பாட்டை நன்கு ஆராய்ந்து பாதகம் இல்லை என்ற பட்சத்த்தில் கோமேதகம், வைடூரியம் போடலாம்.

    மேலும் படிக்க... செல்வத்தை தரும் வரலட்சுமி விரத நேரம் இதோ!



    ரத்தினக் கற்களின் பலன்கள்:

    மேஷம்: லட்சியத்தோடு வாழும் மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் அச்சமற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆர்வம், மன வலிமை காரணமாக தலைவர்களாக மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு. இத்தகைய குணங்களைப் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு கார்ன்ட் (Garnet) ரத்தினக்கல் மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும். இந்த கல்லை அணிந்திருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமும், நீடித்த புகழும் கிடைக்கும்.

    ரிஷபம்:

    சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இலக்குகளை அடைய கடினமாக உழைக்கும் ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதை நோக்கமாக கொண்டிருப்பார்கள். 2021ம் ஆண்டில் இவர்களுக்கு ஓபல் (Opal) ராசிக்கல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். இது மற்றவர்களுடனான உறவை வலுப்படுத்தவும், மகிழ்ச்சியையும் அன்பையும் அள்ளிக்கொடுக்கும்.

    மிதுனம்: 

    புதனின் ஆட்சிப்பெற்ற மிதுன ராசிக்காரர்கள் அதிவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஜேட் (Jade) ராசிக்கல் உதவும். எப்போதும் அதிவேகமாக செயல்படுபவர்களை அமைதிப்படுத்த ஜேட் ராசிக்கல் உதவுகிறது. எண்ணங்களில் சமநிலையை ஏற்படுத்தி ஞானத்தைக் கொடுக்கிறது. எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களில் மிதுன ராசிக்காரர்கள் பயணிக்க இந்த ராசிக்கல் உதவும்.

    கடகம்: 

    இயல்பான குணாதிசயங்களை உடைய கடக ராசிக்காரர்கள், மற்றவர்களை எளிதில் எடைபோடும் திறன்படைத்தவர்கள். சந்திரனின் அட்சியில் இருப்பதால் இவர்களுக்கு இந்த ஆண்டில் மூன்ஸ்டோன் கல் பயன்படும். இந்தக் கல் வணிகத்திலும், வாழ்கையிலும் வெற்றியை நிலைநாட்ட இவர்களுக்கு உதவுகிறது. மன அமைதியை ஏற்படுத்துவதுடன் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது. திடமான மனநிலையில் இருக்க இந்த ராசிக்கல் கடக ராசிக்காரர்களுக்கு உதவும்.



    மேலும் படிக்க... ஏழரைச் சனி என்றால் என்ன? யாருக்கு பாதிப்பு வரும்?

    சிம்மம்:

    சூரியனின் ஆட்சிப்பெற்ற சிம்ம ராசிக்காரர்கள் எந்தவொரு செயலில் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். உறவுகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துவார்கள். லட்சியத்துக்காக உழைக்கும் அவர்கள், அந்த எண்ணத்தினாலேயே மன அழுத்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. ரெட்ஸ்பைனல் (Red Spinel) ரத்தினக்கல் இத்தகைய மனக்குழப்பத்தில் இருந்து விடுபட அவர்களுக்கு உதவியாக இருக்கும். மனச்சோர்வைக் குறைத்து புதிய வழியில் பயணிக்கு இந்தக் கல் அவர்களுக்கு பயன்படும்.

    கன்னி:

    புதன் ஆட்சி பெற்றிருக்கும் கன்னி ராசிக்காரர்கள், சிறந்த முறையில் திட்டமிடுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மனதை அலைபாயவிடுவார்கள். பச்சை டூர்மலைன் (Green Tourmaline) ரத்தினக்கல், அவர்களை மனம் அலைபாய்வதில் இருந்து தடுத்து புத்துயிர்பெற்று தன்னம்பிக்கையுடன் வாழ உதவும். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும், அறிவாற்றலையும், மன ஒரும்பாட்டை மேம்படுத்தவும் கன்னி ராசிக்காரர்களுக்கு பச்சை டூர்மலைன் ராசிக்கல் உதவியாக இருக்கும்.

    துலாம்: 

    சுக்கிரனின் கட்டுப்பாட்டில் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய அவர்களுக்கு எப்போதும் மனக்குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். எந்தவொரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய கடினமாக உழைக்கும் துலாம் ராசிக்காரர்கள், வெள்ளை குவார்ட்ஸ் (White Quartz) ராசிக்கல்லை பயன்படுத்தினால் இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அடிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆன்மீக நாட்டத்தையும் கொடுக்கும்.

    விருச்சிகம்:

    ஒருவரை மனக்கண்ணில் எடைபோடுவதில் வல்லவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். உணர்ச்சிவசப்பட்டாலும் உறுதியாக இருக்கும் அவர்கள், மற்றவர்களும் தங்களைப்போல் இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். செவ்வாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் உடல் ஆற்றலை அதிகமாக பயன்படுத்துவார்கள். இதனால் களைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கார்லியன் (Carnelian) ராசிக்கல்லை பயன்படுத்துவது நல்லது. இது அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

    தனுசு:
    குருபகவானின் ஆட்சிப்பெற்ற தனுசு ராசிக்காரர்கள் லட்சியத்துக்காக கடினமாக உழைக்ககூடியவர்களாக இருப்பார்கள். சாகசங்களை படைப்பார்கள். அன்பு நிறைந்திருக்கும் இவர்களுடன் குடும்பம், நட்பு வட்டமும் எப்போதும் சூழ்ந்திருக்கும். சிட்ரின் (Citrine) ரத்தினக் கல்லை பயன்படுத்தினால் இந்த ஆண்டில் ஏற்படும் குழப்பங்களை தவிர்த்து மனம் அமைதியான திசையில் பயணிக்க உதவும். தனித்துவம் மற்றும் சுயமரியாதையுடன் வாழவும் சிட்ரின் ரத்தினக் கல் தனுசு ராசிக்காரர்களுக்கு உதவுகிறது.

    மகரம்: 
    சனியின் ஆட்சிப்பெற்ற மகர ராசிக்காரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகையும் வெல்லும் திறன் தங்களுக்கு இருப்பதாக நினைக்கும் அவர்கள், தங்களின் இலக்கை அடைய கடுமையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதனால், மனக்குழப்பம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அமேதிஸ்ட் (Amethyst) ராசிக்கல் அவர்களை இத்தகைய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். புது கிரியேடிவ் சிந்தனைகளை உங்களுக்குள் உருவாக்கி, குழப்பமான மனநிலையில் இருந்து வெளியேற இந்த ராசிக்கல் உங்களுக்கு உதவும். போதைப்பழக்கத்திலிருந்து உங்களை மீட்டு, நீங்கள் யார் என்பதை உணர உதவும்.



    மேலும் படிக்க... அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

    கும்பம்: 

    சிறந்த சிந்தனை மற்றும் தனித்துவமான மன திறன்களைக் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் சனி கிரகம் ஆளும் ராசியாகும். கமுக்கமான சுபாவம் உடைய கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக எப்போதும் நிலையற்றவர்களாக இருப்பார்கள். எண்ண ஓட்டத்தில் நிலைப்பெற்று நல் வழியில் பயணிக்க அயோலைட் ( Iolite) ராசிக்கல்லை அவர்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம், உள்ளுணர்வு, மனவலிமைப்பெற்று தன்னம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது. உறவுகளுக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை நீக்கவும் இந்த ராசிக்கல் உறுதுணையாக இருக்கும்.

    மீனம்:

    வியாழனால் கட்டுப்படுத்தப்பபடும் மீன ராசிக்காரர்கள் அதிக ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் நிறைந்து இருக்கும். இதனால் எளிதில் சோர்வடைய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் புஷ்பராகம் (Yellow Topaz) ரத்தினக்கல்லை பயன்படுத்துவது நல்லது. இந்தக் கல் அவர்களின் வாழ்க்கையில் செழிப்பையும், நிலையான வாழ்க்கை வாழவும் உதவும். இந்தக் கல்லை அணிவதன் மூலம் லட்சியங்களில் வெற்றிடைவார்கள்

    மேலும் படிக்க... Panchangam | இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 22, 2021)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: