ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தீபாவளி பண்டிகைக்கு இந்த 5 பொருட்களை மறந்தும் வாங்க வேண்டாம்.. ஐதீகம் சொல்லும் காரணம்

தீபாவளி பண்டிகைக்கு இந்த 5 பொருட்களை மறந்தும் வாங்க வேண்டாம்.. ஐதீகம் சொல்லும் காரணம்

தீபாவளி பண்டிகைக்கு இந்த 5 பொருட்களை மறந்தும் வாங்க வேண்டாம்

தீபாவளி பண்டிகைக்கு இந்த 5 பொருட்களை மறந்தும் வாங்க வேண்டாம்

Deepavali 2022 | தீபாவளிக்கு சில பொருட்களை வாங்கக்கூடாது என்று பட்டியலிட்டு இருக்கும் பொருட்களை பார்த்தீர்கள் என்றால், அவை நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தன்மை இருக்கும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. இந்தியாவில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் தீபாவளிக்கு தனி இடம் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தீபாவளி பண்டிகைக்கான ஷாப்பிங், ஆடைகள், பட்டாசு, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று களைகட்டத் தொடங்கிவிடும். அதுமட்டுமல்லாமல் தீபாவளி நேரத்தில் மொபைல் நிறுவனங்கள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பல நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சிறப்பு சலுகைகளுடன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். வட இந்தியாவில், தீபாவளி அன்று தங்கம், வைரம், வெள்ளி என்று நகைகளும், நாணயங்களும் வாங்கும் பழக்கம் உள்ளது.

  தீபாவளியன்று சில பொருட்களை வாங்கினால் மிகவும் சுபிட்சமாக மங்களகரமாக இருக்கும் என்று ஐதீகம் உள்ளது. அதேபோல தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில பொருட்களை வாங்கவே கூடாது. தீபாவளி அன்று நீங்கள் தவிர்க்க வேண்டிய பொருட்கள் பட்டியல் இங்கே.

  இரும்பு பொருட்கள்

  பொதுவாக, இரும்புப் பொருட்களை சுப நாட்களில், விசேஷ தினங்களில் எப்போதுமே வாங்க மாட்டார்கள். எனவே, தீபாவளி அன்று நீங்கள் இரும்பு உள்ள பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, இரும்பு பாத்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.

  ஸ்டீல் சாமான்கள்

  தீபாவளி அன்று ஸ்டீல் சாமான்கள் வாங்குவது மங்களகரமானது அல்ல என்று கருதுகிறார்கள். இரும்பு போலவே ஸ்டீல் சாமான் எதுவாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். ஸ்டீல் சாமானுக்கு பதிலாக வெண்கலம் அல்லது செம்பு பாத்திரங்களை, பொருட்களை வாங்கலாம்.

  கண்ணாடி பொருட்கள்

  கண்ணாடியிலான எந்த பொருட்களாக இருந்தாலும், அது அலங்கார பொருட்களாக இருந்தாலும் சரி வீட்டில் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள் ஆக இருந்தாலும் சரி தீபாவளியன்று வாங்குவதை தவிர்க்க வேண்டும். வடமாநிலங்களில் கண்ணாடி பொருட்களை தீபாவளிக்கு பரிசாக வழங்க மாட்டார்கள்., கண்ணாடி பொருட்கள் லேசாக கை தவறினாலே உடைந்து போகும் என்பதால், நல்ல நாளன்று கண்ணாடி உடைவது அபசகுனமாகக் கருதப்படுகிறது. ஜோதிட ரீதியாக கண்ணாடி பொருட்கள் ராகுவுடன் தொடர்புடையது. ராகு என்பது நிழல் கிரகம் மற்றும் இயற்கையான பாவ கிரகம் என்பதால் அதனை தவிர்த்து விடுவார்கள்.

  கூரான பொருட்கள்

  தீபாவளிக்கு சில பொருட்களை வாங்கக்கூடாது என்று பட்டியலிட்டு இருக்கும் பொருட்களை பார்த்தீர்கள் என்றால், அவை நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தன்மை இருக்கும் பொருட்களாகத்தான் இருக்கும். நல்ல நாளன்று வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக, இருக்கும் நாளன்று, கூரான பொருட்கள் வாங்கி அதனால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அந்த நாளின் அழகையே பாதித்து, வீட்டில் இருப்பவர்களின் மகிழ்ச்சியை குலைத்துவிடும். எனவேதான் கூரான பொருட்களை வாங்கக்கூடாது என்று கூறி இருப்பதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கூரான பொருட்கள் ஒருவருக்கு காயம் ஏற்படுத்தும் தன்மைகொண்டதால் அது எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே, கத்தி, கத்திரிக்கோல், உள்ளிட்ட எந்த கூரான பொருட்களையும் வாங்காதீர்கள்.

  எண்ணெய் மற்றும் நெய்

  ஒரு சில சமூகங்களில், பண்டிகை நாளன்று எண்ணெய் மற்றும் நெய் வாங்குவதை தவிர்ப்பார்கள். விசேஷத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து விடுவார்கள். அதிகமாக இருந்தால் பரவாயில்லை, இதற்கு பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்று கருதப்படுகிறது. எனவே தீபாவளி அன்று, எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவுக்கு முன்கூட்டியே வாங்கி வைத்து விட வேண்டும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Deepavali, Diwali