Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசி பெண்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்... (மார்ச் 08,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசி பெண்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்... (மார்ச் 08,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | தற்போது கூடுதலாக வந்து சேர்ந்துள்ள பொறுப்புகள் உங்களுக்கு சுமையாக இருக்கலாம்.

மேஷம்:

தற்போது கூடுதலாக வந்து சேர்ந்துள்ள பொறுப்புகள் உங்களுக்கு சுமையாக இருக்கலாம். எதையாவது சாதிக்க வேண்டும் என தூண்டும் மனம் உங்களிடம் உள்ளது, எனவே சலிப்பூட்டும் வேலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் சொந்த ஆக்கபூர்வமான யோசனைகளின் படி வேலை செய்ய முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல மணிக்கற்கள்

ரிஷபம்:

இந்த நாள் உங்களுக்கு புதிய செயல்களைக் கொண்ட நாளாக அமையும். மனதில் நல்ல தெளிவான மனநிலை உண்டாகும். கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த முடிவுகள் சிலவற்றிற்கான பக்கவிளைவுகளை இப்போது சந்திக்க நேரிடலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - காகம்

மிதுனம்:

ஒரு முடிவை எடுத்து அதில் உறுதியாக இருப்பது முக்கியம். புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் கொஞ்சம் நடுக்கம் அல்லது பதட்டமாக உணரலாம். வீட்டில் இருப்பவர்கள் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கருப்பு படிகம்

கடகம்:

உங்களை ஆதரித்து வந்த நபர்கள் இப்போது தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முயலாம். இருப்பினும் உங்களுடைய பணிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும். அப்போதும் சுயநலமின்றி உண்மையாக உழைத்தவர்களை அடையாளப்படுத்த தவறாதீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தெளிவான நீல வானம்

சிம்மம்:

‘நாம் தொட்டது எதுவுமே துலங்காது’ என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இன்று மாறப்போகிறது. உங்களுக்கான அங்கீகாரத்தை இன்று நீங்கள் கைத்தட்டலுடன் எதிர்பார்க்கலாம். உங்களை மிகவும் நம்பிய ஒருவர் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புது கேஜெட்

கன்னி:

உங்கள் பணியை முதன்மைபடுத்துவது பற்றி ஆர்வம் பிறக்கும். உள்ளுணர்வை பின்பற்றி உங்களால் முடிந்தவரை அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய வேலையை கவனித்து வரும் ஒருவர், உங்களை தகுதியான நபராக உணரவைப்பார். எப்போதுமே எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க கூடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உருவப்படம்

துலாம்:

நீங்கள் நீண்ட நாட்களாக கனவு கண்ட விஷயத்தை அடைவதற்கான சாதகமான சூழ்நிலை இன்று உருவாகலாம். ஆனால் அதில் சில தடைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு துணி

விருச்சிகம்:

எல்லா விஷயங்களுக்கு பின்னாலும் ஒரு மந்திரம் இருக்கிறது. நீங்கள் திட்டமிடுவதை உங்களால் செய்ய முடிகிறதா அல்லது நிலுவையில் உள்ள ஒன்றைப் பெறுகிறீர்களா அல்லது அடுத்து என்ன செய்வது என்பது குறித்த புதிய யோசனைகளைப் பெறுகிறீர்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பசுமையான புல்

தனுசு:

உங்களை சிரிக்க வைக்கும் விஷயம் மற்றவர்களை ஈர்க்காமல் போகலாம். அதற்காக அத்தோடு நின்றுவிடாமல், சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சியுங்கள். உங்கள் விஷயத்தில் எல்லாமே சிறப்பானதாக அமையாவிட்டாலும், சிறிய முயற்சிகள் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடு இப்போது கைக்கு வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டாம் பூச்சி

மகரம்:

சிலருக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டமான நாளாக அமையும். நீங்கள் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த புதிய தொடக்கத்திற்கான கதவுகள் இன்று திறக்கும். உங்களை நம்பி வந்த ஒருவர் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணரலாம். உங்களுடன் கூடுதலாக நேரத்தை செலவிட உங்கள் பெற்றோர் காத்துக்கொண்டிருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீர் நிலை

கும்பம்:

எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் முயற்சியை கைவிட மாட்டீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத ஒருவரிடமிருந்து உங்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பனை மரம்

மீனம்:

நீங்கள் செய்த புரோஜக்ட் அல்லது வேலை நிராகரிக்கப்பட்டால், அதை மீண்டும் சரி செய்து காட்ட வேண்டும் என்பதால் சற்றே பதட்டமாக உணரலாம். ஆனால் உங்களிடம் அதற்கான சக்தி உள்ளதை உணருங்கள். மனதளவில் தொந்தரவு செய்யும் ஒன்று வெவ்வேறு வடிவங்களில் தோன்றலாம், ஆனால் நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உங்களை மையப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய மன உறுதியை திசை திருப்பக்கூடிய பல விஷயங்கள் தோன்றலாம், ஆனால் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புகைப்பட சட்டம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி