Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு வருமானம் அதிகமாக இருக்கும்... (05.03.2022)

தெய்வீக வாக்கு: இன்று இந்த ராசியினருக்கு வருமானம் அதிகமாக இருக்கும்... (05.03.2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan: உங்களுடைய தனித்துவமான செயல்கள் இன்று மிகவும் முக்கியமானவை. அது உங்களுக்கான தளத்தை வழங்கும். முடிக்காமல் இருக்கும் வேலைகளை இன்று செய்து முடிக்கலாம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 19)

நீங்கள் நினைத்ததை விட இன்று மிகவும் பிஸியாக இருப்பீர்கள். திடீரென்று வழங்கப்படும் வேலை உங்களின் கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்ளும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதன் மீது கவனம் செலுத்தவும். அவசியம் இல்லையென்றால், நீங்கள் வேறு எதிலும் கமிட் செய்து கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மல்லிகைப்பூ

ரிஷபம் (ஏப்ரல் 20 – மே 20)

இன்று காலை நேரத்தை உங்களுக்கு விரும்பியவற்றில் செலவு செய்து ஓய்வெடுத்து கொள்ளுங்கள். மதியத்திற்கு மேல் உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். உங்களுடைய நெருக்கமான நண்பர் உங்களுக்கு சாதகமான செய்தியை சொல்வார். நீங்கள் நீண்ட காலமாக எதையாவது தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தால் அதை இப்பொழுது நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்படும் என்பதிலும் கவனமாக இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – எலுமிச்சை நறுமணம்

மிதுனம் (மே 21 – ஜூன் 21)

நிதி ரீதியான லாபங்களும் வருமானமும் அதிகமாக இருக்கும் நாள். உங்களுக்கு நீண்ட காலமாக வரவேண்டிய தொகையும் அல்லது உங்களுடைய புதிய கமிட்மென்ட் களும் உங்களுக்கு பணத்தை பெற்றுத் தரும். உங்கள் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இடைவேளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – இரண்டு அணில்கள்

கடகம் (ஜூன் 22 – ஜூலை 22)

உங்கள் கடந்த கால திட்டங்கள் சரியாக பலன் தராமல் போயிருக்கலாம். ஒரு பக்க ரிலேஷன்ஷிப் உங்களுக்கு முக்கியத்துவம் இழக்கும். எனவே, நீங்கள் அதிலிருந்து வெளியே வர விரும்புவீர்கள், அரசாங்க வேலை மற்றும் மீடியாவில் இருப்பவர்களுக்கு மிகவும் நெருக்கடியான ஆனால் அர்த்தமுள்ள நாளாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கழுகு

சிம்மம் (ஜூலை 23 – ஆகஸ்ட் 22)

உங்களுடைய தனித்துவமான செயல்கள் இன்று மிகவும் முக்கியமானவை. அது உங்களுக்கான தளத்தை வழங்கும். முடிக்காமல் இருக்கும் வேலைகளை இன்று செய்து முடிக்கலாம். உங்கள் பார்ட்னருக்கு உங்கள் ஆதரவு தேவை, ஆனால் உங்களால் போதிய நேரம் வழங்க முடியாமல் போகலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அறிவிப்பு பலகை

கன்னி (ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 22)

உங்களுடைய ஆசைகளில் தெளிவாக உறுதியாக இருங்கள். சில விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். உங்களுடைய செயல்களை பலரும் தவறாக நினைக்கலாம். ஆனால், ஆற்றல் நிறைந்த நபர் உங்களை தொடர்பு கொள்வது நன்மையில் முடியும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் சஃபையர்

துலாம் (செப்டம்பர் 23 – அக்டோபர் 23)

இன்று மிகவும் கச்சிதமான நாள் மற்றும் நீங்கள் அதை முழுவதுமாக வாழலாம். எல்லாவற்றையும் முறையாக செய்து பழகுங்கள். உங்களை இன்று வழிகாட்டும் ஆற்றல் நல்ல பாதைக்கு கொண்டு செல்லும். குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – புதிய கேட்ஜெட்

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 21)

புதிய ஹாபி ஒன்று உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைத் தரும். நீங்கள் சமீபத்தில் சந்தித்த ஒருவரை நம்புவீர்கள். உங்களுக்குள்ளேயே தோன்றும் தேவையில்லாத டிராமா, குழப்பங்களையும், மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். புதிய பழக்கத்தை உருவாக்கி, அதை பின்தொடருங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – விளக்குகளின் சரம்

தனுசு (நவம்பர் 22 – டிசம்பர் 21)

முதிர்ச்சியில்லாத உரையாடலில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்களின் நோக்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றால், நீங்கள் சிறப்பாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு நபரால் உங்களுக்கு ஏதேனும் தடங்கல் ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வெண்ணிலா நறுமணம்

மகரம் (டிசம்பர் 22 – ஜனவரி 19)

உங்களின் நோக்கங்கள் இன்று சரியாக இருக்கும். பல நாட்களாக, நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள், அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது. உங்களுக்குள்ளே இருக்கும் பயத்தை தள்ளி வைத்து, புதிய சவாலை நீங்கள் சந்திக்க வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஷ்ரூம் தொட்டி

கும்பம் (ஜனவரி 20 – பிப்ரவரி 18)

நீங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். எல்லா யோசனைகளையும், சிந்தனைகளையும் வரவேற்கும் படி திறந்த மனதுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு கடினமாக இருந்தாலும், நீங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக செயல்படுத்த வேண்டும். புதிய நபர்களை வேலைக்கு எடுக்கலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான வானம்

மீனம் (பிப்ரவரி 19 – மார்ச் 20)

உங்களுடைய பயம் உண்மையாகி விடுமோ என்று நீங்கள் உணரக்கூடும். தைரியத்தை வரவழைத்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களின் துணிச்சலான மனநிலை, உங்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கும். புதிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஊதா நிறப் பூங்கொத்து
Published by:Murugesh M
First published:

Tags: Oracle Speaks, Rasi Palan

அடுத்த செய்தி